ஆச்சிக்கு அங்கீகாரம்!



ஆச்சி மசாலாவின் அரிய உழைப்பையும் தரத்தையும் அங்கீகரிக்கும் விதமாக இந்திய அளவில் சிறந்த மசாலாப் பொருளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜிக்ஷீust ஸிமீsணீக்ஷீநீலீ கிபீஸ்வீsஷீக்ஷீஹ் (ஜிஸிகி) என்ற நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் உள்ள 5,000 பிராண்டுகளில் பிரபலமான 1,000 பிராண்டுகளை தேர்ந்தெடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஆச்சி மசாலா சிறந்த மசாலாக்கள் தயாரிப்பில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்திய அளவில் அனைத்துப் பொருட்களுடனும் ஒப்பிடும் போது 174வது இடத்தையும் பெற்றிருப்பது பெருமைக்குரியது!

‘‘கிலோ கணக்கில் பொருட்களை வாங்கி வெயிலில் உலர்த்தி அரைத்து அதை வண்டு, பூச்சிகளிடம் இருந்து பாதுகாப்பதென்பது சவாலான விஷயம்தான். அப்படியும் மெனக்கெட்டு அரைத்து வைத்தாலும் சில நாட்களிலேயே பூஞ்சை பிடித்துவிடும். குறைந்த அளவில் அரைக்கலாம் என்றால் மிஷினில் அரைத்துத் தர மாட்டார்கள்.

 இந்த நேரத்தில்தான் எங்களுக்கு இப்படி ஒரு எண்ணம் வந்தது. தேவைக்கு ஏற்ப, சின்னச் சின்ன பாக்கெட்டுகளாக மசாலாப் பொருட்களை கொடுத்தால் என்ன என்று யோசித்ததன் விளைவாகத்தான் இன்று எங்கள் நிறுவனம் இந்த உயரத்தை எட்டியிருக்கிறது. 1998ல், ஒரு ரூபாய் பாக்கெட்டுகளாக ஆரம்பித்தோம். மக்களின் வரவேற்பைப் பார்த்து 25 கிராம், 50 கிராம், 100 கிராம், கால் கிலோ என படிப்படியாக, தரம் குறையாமல் உயர்த்தியிருக்கிறோம். அடுத்து, சாம்பார் பவுடர், கரம் மசாலா, வற்றல் குழம்பு மசாலா, ரசத் தூள், இட்லிப் பொடி, மோர்க்குழம்பு பொடி, புளியோதரைப் பொடி என இன்ஸ்டன்ட் பவுடர்களை அறிமுகப்படுத்தினோம்.

வேலைக்குச் செல்லும் பெண்களின் சுமையைக் குறைக்க அறிமுகம் செய்யப்பட்டதுதான் ரைஸ் பேஸ்ட் வெரைட்டி. எங்கள் தயாரிப்புகள் எல்லாமே சிறப்பானதாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் சொல்வதை கேட்கும் போது உத்வேகம் அதிகமாகிறது’’ என்கிறார் ஆச்சி மசாலா குழுமத்தின் தலைவர் பத்மசிங் ஐசக்.  ‘‘இந்த விருது எங்களுக்கு புதியதொரு உத்வேகத்தை கொடுத்துள்ளது. இதை நாங்கள் தக்க வைத்துக் கொள்ளவும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு   தரமான பொருட்களை கொடுக்கவும் எப்போதும் தயாராக இருப்போம். இதுவரை சமையல் பொருட்களை சார்ந்து இயங்கி வந்தோம். மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு டயட் இட்லி, டயட் தோசை, நவ

தானிய இட்லி போன்ற பொருட்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்பது இப்போது அத்தியாவசிய தேவையாக இருப்பதால் ‘ஆச்சி பேக்கேஜ்டு டிரிங்கிங் வாட்டர்’ கொண்டு வரும் திட்டம் இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களில் இருப்பது போல ஆச்சி கிச்சன் என்ற தொடர் கிச்சன் வகையை அறிமுகப்படுத்த இருக்கிறோம். ஒவ்வொரு நாட்டு உணவு வகையையும் ஒரே இடத்தில் இருந்து சாப்பிடும் உணர்வை கொண்டு வந்து சேர்க்கும் இந்த திட்டம் விரைவில் தமிழகத்தில் அறிமுகமாக இருக்கிறது. இதனால் அவரவர்க்கு பிடித்த ஃபாஸ்ட் புட் உணவுகளை ருசிக்கலாம்.

Aachi Institute of Management and  Entreprenuership Development என்ற கல்வி நிறுவனத்தை தொடங்கும் திட்டம் இருக்கிறது. இதன் மூலமாக நாட்டில் பல தொழில் முனைவோர்களை உருவாக்கி தரமான பொருட்களை மக்களுக்கு கிடைக்கச் செய்வதே எங்களின் நோக்கம்’’ என்றார் நிர்வாக இயக்குநர் தெல்சா ஐசக்!
- எஸ்.பி.வளர்மதி