பிரியங்களுடண்



மார்கழி இசை சிறப்பிதழாக வலம் வந்து மனம் கவர்ந்த தோழி ‘உள்ளம் கவர்ந்தவள்’ அல்ல! ‘உள்ளம் கொள்ளை கொண்டவள்’!
- பொ.உமாதேவி, பு.புளியம்பட்டி., சு.சினேஹா ஸ்யாம், சென்னை-23 மற்றும் வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.
30 வகை கேக் குக்கீஸ் சமையல் குறிப்புகள் ஆண்டு முழுவதும் கேக்குகளை செய்து பார்க்க வழி காட்டும் பெட்டகம்!

- வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18.
நித்யஸ்ரீயின் மனம் திறந்த ‘துன்பமும் இன்பமும் கலந்ததே பிரபஞ்சம்’ பேட்டி அசத்தல்!
- வனஜா மூர்த்தி, சென்னை-17.
‘மிளகாய் என்றால் காரம்’ என்றுதான் இத்தனை நாள் நினைத்துக் கொண்டிருந்தேன். டயட்டீஷியன் அம்பிகா சேகர் சொன்ன ‘மிளகாய் ரெசிபி’ செய்து பார்த்து அசந்து போனேன். 
- இ.டி.ஹேமமாலினி, சென்னை-23.
ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா சீக்ரெட் ரெசிபியைக் கொடுத்து, புது வருடத்தை
வீட்டிலேயே இனிமையாகக் கொண்டாட வழி வகுத்துவிட்டது தோழி. பாராட்டுகள்!
- பி.ரஜினி, சென்னை-91.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அதை வீட்டிலேயே செய்து சாப்பிட்டு மகிழலாம் என்று ரெசிபி தந்ததற்கு மனமார்ந்த பாராட்டுகள்.
- பிருந்தா ரமணி, மதுரை-3 (மின்னஞ்சலில்)...
‘நடன வாரிசுகளின் நட்பு வட்டம்’ கட்டுரையை நடுப்பக்கத்தில் அபிநயங்களோடு வெளியிட்டு அசத்தி விட்டீர்கள். நரசிம்மாச்சாரி-வசந்தாலட்சுமியின் லாஸ்யாவுக்கு கங்ராட்ஸ்!
- எஸ்.சம்பூரணி, மதுரை-14.
‘ததும்பி வழியும் மௌனம்’ மனதைத் தொட்டது. வார்த்தைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய நேரமிது!
- ஆர்.காவ்யா, செ.புதூர்.
‘பூசணிக்காய் பூரிப்பு’ - பூசணிக்காயில் இத்தனை விதவிதமான சமையல்களா என ஆச்சரியப்பட வைத்தது.
- கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.
‘அன்புக்கும் உண்டு அடைக்கும் தாழ்!’ டாக்டர் மரகதத்தின் அறிவுரை மீண்டும் மீண்டும் படித்து கவனத்தில் வைக்க வேண்டியது.
- ராஜி குருஸ்வாமி, சென்னை-88.
பின்னணிப் பாடகி ரீட்டாவின் ‘என் அம்மா’ பேட்டி மிகவும் சிறப்பு. ‘அம்மாதான் என்னோட ஃபர்ஸ்ட் அண்ட் பெஸ்ட் ஃப்ரெண்ட்’
எனக் கூறும் ரீட்டா ‘அடுத்த ஜென்மத்திலும் தொடரும் பந்தம் இது’ என நம்மையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டார்.
- ம.வசந்தா, கச்சிராயபாளையம்.
‘மறைந்து கிடக்கும் மர்மம்’ கட்டுரை பிரமாதம். பயனுள்ள தகவல். வெர்சுவல் வாட்டர் பற்றி தோழியில் படித்துதான் தெரிந்து கொண்டேன். நீரை அதிகம் எடுக்கும் பொருளை இறக்குமதி, ஏற்றுமதி கணக்கீடுகளைச் செய்யும் மேலை நாடுகளின் அணுகுமுறை பொருளாதாரம் படித்த எனக்கு மிக்க பயனுள்ள தகவல்.
- விஜயா சுந்தர்ராஜன், பெருமாள்பட்டு.
ஆட்டம் (நாட்டிய கலைஞர்கள்), பாட்டம் (பாடகிகள்), கொண்டாட்டம் (சமையல், தோட்டக்கலை, குடும்பம்) என மார்கழிச் சிறப்பிதழ் கலை, கலாசார சிறப்பிதழாகவே மிளிர்ந்தது. ‘இயற்கை மீதான போர் மூலம் மனிதன் அவன் மீதே போர் தொடுக்கிறான்’ என்ற ரேச்சல் கார்சன் கருத்து திடுக்கிட வைத்து, யோசிக்கவும் வைத்தது. இனிய இல்லறத்துக்கு ரீ ரெகார்டிங் வாசிக்கும் கொலுசுகளில் இத்தனை வகைகளா! மலைத்துப் போனேன். ‘குரலை வச்சு பிழைக்கிறவங்க, வாரம் ஒருமுறை மௌன விரதம் இருப்பது நல்லது’ என்ற டாக்டர் மனு வர்கீஸின் அட்வைஸை பிரபல பேச்சாளர்களே கடைப்பிடிக்கிறார்கள். மார்கழி மாத குளுகுளு குளிருக்கு ‘தேநீர் A to Z’ சூடான சுக்கு டீ குடித்த திருப்தியை தந்தது.
- அ.யாழினி பர்வதம், சென்னை-78.
புத்தாண்டு பரிசாக இன்டக்ஷன் ஸ்டவ் மற்றும் ஹாட் பேக் வழங்கியதற்கு தேங்க்ஸ். ‘மிருதங்க சக்கரவர்த்தினி ரஜ்னா’, ‘கடம்’ சுகன்யா, ‘கஞ்சிரா’ கிருஷ்ணப்ரியா, கண்ணாடியில் செய்த துணி என கேள்வியே பட்டிராத அரிய தகவல்களை அள்ளித் தெளித்து அசத்துவதில் தோழிக்கு நிகர் தோழிதான்!
- மல்லிகா அன்பழகன், சென்னை-  78. 
மாண்டலின் சகோதரிகள் ஸ்ரீ உஷா, சிரிஷா பேட்டி மிகவும் அருமை. தினந்தோறும் அந்த சகோதரிகளின் தேனினும் இனிய அந்த இசைக்கருவியின் இசை இன்பத்தை ரசித்தவாறே எனது பணிகளில் ஈடுபடுவேன். எங்களின் அடுக்கு மாடிக் குடியிருப்பில்தானே அவர்களும் இருக்கிறார்கள்!
- லஷ்மி குஞ்சரம் சென்னை-26 (மின்னஞ்சலில்)...
இளம் நடனக் கலைஞர்கள் கலையோடு சேர்த்து, ஒற்றுமையை வளர்க்கும் விதமான நடன நிகழ்ச்சியை ‘நடன வாரிசுகளின் நட்பு வட்டம்’ மூலம் படித்து பெருமைப்பட்டேன்.
- பானு பெரியதம்பி, சேலம்-30 (மின்னஞ்சலில்)...