மகிழ்ச்சி என்பது யாதெனில்...



முதல் நாள் செய்த சமையலுக்கு மேக்கப் போட்டு புதுசு மாதிரி அலங்காரம் செய்து சாப்பாட்டு மேசையில் வைத்தவுடன் கிடைக்கும் அந்தப் பாராட்டு!

- சொர்ணவல்லி சாமிநாதன்

அடுத்தவரின் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி என்னைப் பொறுத்தவரை...
- வளர்மதி பிரபாகர்

போக்குவரத்து நெரிசலே இல்லாத பெங்களூரு சாலையில் அதிவேகமாகப் பயணம் செய்வது...
- ஸ்ரீகௌரி ராஜேஷ்

மழலையின் குழலினிய பேச்சைக் கேட்கும்போது ஏற்படுவது...
- சரஸ்வதி ராஜேந்திரன்

என் இருசக்கர வாகனத்தில் போகும்போது அருகே வரும் ஆட்டோ ரிக்ஷாக்களில்
அடைந்து கிடக்கும் அந்த சின்னஞ்சிறு பள்ளிக்
குழந்தைகளிடம் நான் காட்டும் ‘வெவ்வெவ்வெவ்வே’வும் அவர்களின் கோடு போன்ற பதில் புன்னகையும்!
- சிவப்ரியா

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இனி சந்திக்கவே முடியாது என்று பிரிந்த உறவை மீண்டும்
சந்திக்கும் போது வருவது...
- கமலி பன்னீர்செல்வம்

எடை குறைக்கும் முயற்சியில் இருக்கிறேன்... எடை இயந்திரம் ஒவ்வொரு கிலோவாக
குறைத்துக் காட்டும் அத்துனை தருணமும்... உய்ய்ய்ய்ய்ய்ய்ய்... மகிழ்ச்சிதான்!
- கிருஷ் ராஜசேகர்

காத்திருப்புப் பட்டியலில் நூறாவது இடத்தில் நம் பெயர் இருந்தும் கடைசி நேரத்தில் பயணச்சீட்டு ஊர்ஜிதப்
படுவது...
- பொற்பாவை ராஜூ

தொகுப்பு: அன்னபூரணி நாராயணன்