ட்விட்டர் ஸ்பெஷல்



அப்பா பொம்மை!

BabyPriya @urs_priya
 
பாராட்டு என்பது வெற்றிக்கோ தோல்விக்கோ அல்லாமல் முயற்சிக்காக இருக்க வேண்டும்.

தமிழரசி @barathi 

விழப்போவது கற்களின் மேலா, புற்களின் மேலா என்ற கவலையின்றி சின்னச் சின்ன ராட்டினங்களாக சுற்றி உயிர் உதிர்க்கின்றன பூக்கள்!

உமா க்ருஷ் @umakrishh


சின்னச் சின்ன நலம் விசாரிப்புகளும் சின்னச் சின்ன பரிசளிப்புகளும் நேரத்தே செய்யும் சிறு உதவிகளும்தான் பெரிய மகிழ்ச்சிக்கு அடிப்படை.

Chithra @chithra2020 
.
விளையாட பொம்மை வாங்கித் தரும் அப்பாவை விட, விளையாடுவதற்கு தானே பொம்மையாக மாறும் அப்பாவைத்தான் குழந்தைகளுக்குப் பிடிக்கும்.

Vigneswari Suresh @VignaSuresh 

கொடியில் சற்றுமுன் உலர்த்திய ஈரத்துணிகளின் மேல் சாரை சாரையாக எறும்புகள் ஜிலுஜிலுவென ஊர்வலம் போகின்றன... #இது_எங்க_ஏசி வாசிப்பில் ஒரு பேரின்பம் இருப்பதை, படித்த ஒரு வாக்கியத்தில் நாளெல்லாம் மனம் லயித்து கிடக்கும் போது அறியலாம்! அலுவல் நேரத்தில் கணவர் காரணமில்லாமல் அழைத்தால், அன்று எடுத்துப்போன மதிய உணவை சாப்பிடவில்லை என அறிக!

கீர்த்தனா @Keerthu_
 
அவமானத்துக்குப் பிறகும் ஒருவன் மற்றவர்களை எதிர்கொண்டால் அப்பொழுதே வாழ்க்கையின் முதல் வெற்றி தொடங்குகிறது. இதுவும் கடந்து போகும்தான்... பட், எவ்வளவு சீக்கிரம் போகும்கிறதுதான் கவலையே!

Sushima Shekar @amas32

கடவுள் என் முன் வந்து வரம் தருகிறேன் என்றால், இனிப்புப் பலகாரங்கள் உடல்நலத்துக்கு நல்லதாகவும் அவை எடை குறைக்க உதவும்படியும் வரம் கேட்பேன்.
மற்ற நாடுகள் நம் மஞ்சளுக்கும் பாஸ்மதி அரிசிக்கும் பேடன்ட் வாங்க முயற்சி செய்கிறது. அரசாங்கத்தை உப்புமாக்கு முதலில் பேடன்ட் வாங்கச் சொல்லணும்!
அன்னப் பறவையைப் போல, சுத்திக் கண்டதும் நடந்தாலும் நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்ளுதல், நம் உடல்நலத்துக்கும் உள்ள நலத்துக்கும் நல்லது :))

கயல்விழி @kayal_v 

அனைவராலும் விரும்பப்படும் மணம் மிகுந்த ‘பன்னீர்’ ஆயிரக்கணக்கான ரோஜாக்களின் ‘கண்ணீர்’.  தண்ணீரில் மீன் அழுவதை சக மீன்கள் எப்படி அறிந்து ஆறுதல் சொல்லும்?