ப்ரியங்களுடன்



சித்திரைச் சிறப்பிதழ் அபாரம். 5 அருமையான திரைத் தோழிகள் பற்றிய அறிமுகம் அட்டகாசம். ‘ராஜபாளையம் ஸ்பெஷல் 30’ம் புதுச்சுவை!
- ப.சூரியபிரபா முரளி, சேலம்-1 மற்றும் ராணி விஜயன், கோவை-3.

டிரம்ஸ் கலைஞர் என்றாலே அது ஆண்கள்தான் என்பதை உடைத்து நடிப்பிலும் கலக்கும் ராதிகா ஜார்ஜின் இரட்டைத் திறமையைப் பாராட்டலாம். விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் விரும்பிய துறையில் பயிற்சி எடுத்து பல பரிசுகள் பெற்று, ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லக் காத்திருக்கும் அவரது உறுதி பாராட்டத்தக்கது.
- ஒய்.வெர்ஜினா, கோவை-8 மற்றும் பி.வைஷ்ணவி, சென்னை-68.

காஸ்ட்யூம் டிசைனராகவும் நடிகையாகவும் கலக்கும் சகலகலாவல்லி சுந்தரி திவ்யா மேலும் புகழ் பெற வாழ்த்துகள். சூர்ய நர்மதாவின் ‘சில்ட்ரன் கார்டன்’ சிறப்பு கார்டன்!
- ப.முரளி, சேலம்-1.

‘தக தக தங்கம்’ தொடர் ஆரம்பமே அதிசயம். ‘தங்க’ தகவல்கள் அருமை. 
- அ.பிரேமானந்த், சென்னை-68 மற்றும் ப.மூர்த்தி, பெங்களூரு-97.

‘வார்த்தை ஜால’த்தில் மிருகக் குட்டிகளுக்கான பெயர் விவரங்கள் ரசனைக்குரியவை.
- மோனிஷா பிரியங்கா, திருச்சி-18.

திரைத்துறையில் புதிய எடிட்டராக உலா வரும் முத்துலட்சுமி வரதனுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. ‘ஆயுளை வளர்க்கும் புன்னகை’ - தொழில் முனைவோருக்கு மட்டுமல்ல... எல்லோருக்கும் பயனுள்ளது!
- உமாதேவி பலராமன், திருவண்ணாமலை-1., ஜே.தனலட்சுமி, சென்னை-84 மற்றும் பானு பெரியதம்பி, சேலம்-30 (மின்னஞ்சலில்)...

‘பெண் ஏன் சிறந்தவள்?’ - அறிவியல் சொல்லும் 10 விஷயங்களும் பெண் இனத்துக்கே பெருமை சேர்த்தன.
- ஆர்.ஹேமமாலினி, மணப்பாறை., ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர் மற்றும் கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘உன்னை அறிந்தால்!’- அபிராம்பிகா, ஜெயலட்சுமி இருவரின் பன்முக சேவை சாதனை. ‘பானங்களின் மகாராணி’ என அறியப்படும் மதுரை ஜிகிர்தண்டா சீக்ரெட் ரெசிபி மனசுக்குக் குளுமை தந்தது.
- மயிலை கோபி, சென்னை-83.
 
யு டி.வி. தனஞ்செயன் அம்மாவோடு பார்த்த திரைப்பட அனுபவங்களும் படிப்புமே, அவரை யு டி.வி. மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அளவுக்கு உயர்த்தியிருக்கிறது.
- கீதா பிரேமானந்த், சென்னை-68 மற்றும் கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.

இளம்பிறையின் ‘என்னை வளர்த்த மரங்களில்’ அவர் எழுதியது போல ஒரு மாந்தோப்பு தருகிற மன அமைதியும் குளிர்ந்த உணர்வும் வேறு எதனுடன் ஒப்பிட முடியாதது.
- வத்சலா சதாசிவன், சென்னை-64 மற்றும் ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-16.

சக்தி ஜோதியின் ‘உடல் மனம் மொழி’ ஆண்களின் வாழ்வில் பெண்கள் எவ்வளவு முக்கியத்துவம் நிறைந்தவர்கள் என்று அற்புதமாக உணர்த்தியது.
- விஜயா ராதாகிருஷ்ணன், சென்னை-63 மற்றும் ரா.முத்து, ஆத்தூர்.

வயிற்றுக்கு சோறிடும் விவசாயம் மாண்டால் மானிடம் வாழாது என்பதை உரக்கக் கூறும் தனலட்சுமி பெண்களுக்கெல்லாம் ஒரு முன்னுதாரணம்.
- பிரதிபா வள்ளியூர் ஏ.பி.எஸ்.ரவீந்திரன், நாகர்கோவில் மற்றும் சூர்யா ஸ்ரீதர், காஞ்சிபுரம்.

‘ட்வின்ஸ்’ நேஹா, நிகில் இருவரும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறார்கள். ‘விவாதம்’ பகுதி பிள்ளைகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதை பெற்றோருக்கு கற்றுக் கொடுக்கும் விதத்தில் இருந்தது. ‘என்ன எடை அழகே!’ எல்லோருக்கும் பயனுள்ள பகுதி.
- எஸ்.வளர்மதி, கொட்டாரம் மற்றும் ராஜி குருஸ்வாமி, சென்னை-88.