பெண் நிதி



இது உங்கள் பணம்!

ரேணு மகேஸ்வரி


இன்றைய பெண்களின் பொதுவான சேமிப்பு முறை தங்க நாணயம் மற்றும் தங்க நகைகளில் முதலீடு செய்வதே. ‘திருமணத்துக்குத் தங்கம் வேண்டும்’ என குடும்பங்கள் எண்ணுவதால், அனைவருமே இது பாதுகாப்பான முதலீடு என்று கருதுகின்றனர். உலக தங்க சபையின்படி, தங்கம் வாங்குவதில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

இந்தியா விவசாயத்தை நம்பி வாழும் நாடு என்பதால், தங்கம் சேமிக்கும் வழக்கம் எளிதாகத் தொடங்கியது. விவசாயி நல்ல விளைச்சல் இருக்கும்போதெல்லாம், தன் லாபத்தை தங்கத்தில் சேமித்தான். ஒருவனின் செல்வச் செழிப்பானது, மனைவி, தாய், தங்கை அணிந்துள்ள நகைகளின் மூலமே பிரதிபலிக்கப்பட்டது. அக்காலத்தில் நிலம் மற்றும் தங்கம் ஆகிய சொத்துகளை மட்டுமே சேர்க்க முடிந்தது. நிலமே வருமானத்தின் முக்கிய மூலமாக இருந்தாலும், அதை வேண்டிய நேரத்தில் பணமாக்க முடியவில்லை. அவ்வேளைகளில் சேமிக்கப்பட்ட தங்கமே பணம் திரட்ட உதவியது. நகை பெண்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இதுவே அவர்களுக்கு நிதி பாதுகாப்பும் அளித்தது. இப்போது அந்த நிலை மாறிவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியால், பெண்கள் கல்வி அறிவும் வேலைவாய்ப்பும் பெற முடிந்தது.

என் வாடிக்கையாளர்களில் பலர் தங்க நகை மற்றும் நாணயங்கள் வைத்துள்ளனர். இது அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. பணத்தை நமக்காக வேலை செய்ய வைப்பதே புத்திசாலித்தனமான வழி என்பதை அவர்கள் அறிவதில்லை. இதனால் பெண்கள் தங்கத்தில் முதலீடே செய்யக்கூடாதா? இல்லவே இல்லை!
நாம் 5% - 10% பணத்தை தங்கத்தில்தான் முதலீடு செய்ய வேண்டும். தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பல முறைகள் உள்ளன. தங்க நகைகள் அவற்றில் ஒன்றல்ல. தங்க நகைகளின் சேதாரம் மற்றும் செய்கூலியே அதன் மதிப்பை 10% - 35% குறைத்து விடுகிறதே!

தங்கத்தில் முதலீடு செய்வதைப் பற்றி சில உண்மைகள்..
.

தங்கக் காசுகள்/ கட்டிகள்

வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை காலத்தில் தங்க நாணயங்களை பிரபலப்படுத்தி விற்று வருகின்றன. இத்தங்கத்தை பத்திரமாக வைப்பதற்கான செலவை நாம் மறக்கக்கூடாது. நாம் தங்கத்தை வங்கிகளிலிருந்து அதிக விலைக்கு வாங்கினாலும் கூட, வங்கிகளை நம்மிடமுள்ள தங்கத்தை திரும்ப வாங்க ரிசர்வ் வங்கி அனுமதிப்பதில்லை. அதனால் இத்தங்கத்தை நகை வியாபாரிகளிடம் குறைந்த விலையில்தான் விற்க வேண்டும்.

தங்க பங்குச்சந்தை வர்த்தக நிதி (Gold Exchange Traded Funds) தங்கத்தை இந்த வழியில் சேமிப்பதில் லாபம் உள்ளது. குறைந்த அளவு சேமிப்போருக்கும் அடிக்கடி சேமிப்போருக்கும் இந்த முறை உபயோகமாக இருக்கும். இந்த நிதியின் ஒரு யூனிட் ஒரு கிராம் தங்கத்துக்குச் சமமாகும். இதன் விற்பனை ஷிணிஙிமி அமைப்பு மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.

மின்னணு தங்கம் (EGold)

என்.எஸ்.இ.எல். (NSEL) மோசடி காரணமாக, இது பிரபலம் அடைவது கடினம். இது தங்க வர்த்தக நிதி போலவே, ஒரு நல்ல முதலீட்டு திட்டம்.
ள் தங்க நிதி (Gold funds): இந்த மியூச்சுவல் ஃபண்ட்ஸ் (பரஸ்பர நிதிகள்) மிகவும் பிரபலமான முதலீட்டு திட்டம். இந்தத் திட்டத்தில் தங்கத்தின் மதிப்பு சுரங்க நிறுவனங்களிலிருந்து பெறப்படுகிறது.

தங்கத்தில் எவ்வளவு சேமிக்க வேண்டும்?


5% - 10% சேமிக்கலாம். நகைகளின் மூலமும் சேமிக்கலாம். தங்கத்தில் விற்பனை செய்ய வேண்டும் என்றால், பங்குச்சந்தை வர்த்தக நிதியில் சேமிக்கலாம். ஒரே நேரத்தில் தங்கத்தில் மொத்தமாக முதலீடு செய்வதென்றால், தங்கக் கட்டிகள் வாங்குவதே நல்லது.தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது. அதே நேரம் பழைய மூடநம்பிக்கைகள் மற்றும் கட்டுக்கதைகள் நம்முடைய முடிவை மாற்றாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்!

கடந்த 15 ஆண்டுகளில் தங்கத்தின் நிலவரத்தை நமக்குத் தெளிவாக காட்டும் பட்டியல் இது...
வருமானம் (வரி செலுத்திய பின்) 5 ஆண்டு  10 ஆண்டு  15 ஆண்டு   20 ஆண்டு
பங்கு                                        11.0              17.0         13.6          12.9
தங்கம்                                          9.0         12.9         11.0             8.4
நிரந்தர முதலீடு                         5.7          5.2          5.1             5.5
நிலம் / சொத்து                         8.0         13.4          10.8             6.2
குறியீட்டு எண் (%)                           6.2          5.9           5.7              5.5
அக்காலத்தில் பணவீக்கம் (%)          7.4         6.3           5.9              5.7

(பத்திரப்படுத்துவோம்!)