குளு குளு மாம்பழ பாஸ்தா




தேவையான பொருட்கள்

மாம்பழக்கூழ் (பங்கன பள்ளி (அ) மல்கோவா - 1 கப்,  வேக வைத்து வடிகட்டிய பாஸ்தா - 1 கப் (அல்லது) நூடுல்ஸ் - 1 கப், காய்ச்சிய பால் -  1/2 லிட்டர், சர்க்கரை - 100 கிராம், பாதாம், முந்திரி துருவியது தலா - 20, வறுத்த வெள்ளை எள் (அல்லது) கசகசா - 20 கிராம், வெண்ணெய் - 50 கிராம்.

செய்முறை

மிக்சியில் மாம்பழக்கூழ், பால், சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து விப்பரால் நுரைக்க அடிக்கவும். அதில் துருவிய பாதாம், முந்திரி, எள், பாஸ்தா சேர்த்து கலந்து சூப் பௌலில் முக்கால் பங்கு விட்டு, சில்வர் ஃபாயில் பேப்பரால் நன்கு மூடி ஃபிரீசரில் 3 முதல் 4 மணி நேரம் வைத்து பிறகு சாப்பிடவும். சர்க்கரைக்குப் பதில் நாட்டுச் சர்க்கரை கூட சேர்க்கலாம்.