மாம்பழ லட்டு



தேவையான பொருட்கள்

மாம்பழக்கூழ் - 1 கப், துருவிய தேங்காய் - 1 கப், வறுத்த ரவை - 1 கப், கோவா - 1/2 கப், துருவிய பாதாம், முந்திரி, வறுத்த கசகசா சேர்த்து கரகரப்பாய் பொடித்தது - 100 கிராம், சர்க்கரை - 100 கிராம், பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை.

செய்முறை

வாணலியில் மாம்பழக்கூழ் கொட்டி, அதில் சர்க்கரை கலந்து வதக்கவும். சேர்ந்து வருகையில் தேங்காய் துருவல், கோவா, பாதாம், முந்திரி, கசகசா கலவை, நெய்யில் வறுத்த ரவை, பச்சைக் கற்பூரம் சேர்த்து நன்கு கிளறவும். இறுகியவுடன் இறக்கி, ஆறியவுடன் சிறு சிறு உருண்டைகளாய் பிடிக்கவும். லட்டு தயார். இது 4 அல்லது 5 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.