மாம்பழ சேமியா குல்ஃபி



தேவையான பொருட்கள்

மாம்பழக்கூழ் - 1 கப், பால் - 500 மில்லி, கோவா - 100 கிராம்,  கஸ்டர்டு பவுடர் (அல்லது) சோள மாவு - 4 ஸ்பூன், சேமியா - 100 கிராம், நெய் - 2 ஸ்பூன், வெண்ணெய் - 50 கிராம், முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்த்து கரகரப்பாய் தூள் செய்து - 50 கிராம், குல்ஃபி மோல்ட் (அல்லது) சிறு டம்ளர்கள், குல்ஃபி Sticks.

செய்முறை

சேமியாவை நெய்யில் வறுத்து வைக்கவும். பாலை சுண்டக் காய்ச்சவும். கஸ்டர்டு பவுடர் (அல்லது) சோள மாவை தண்ணீர் விட்டு கூழ்போல் காய்ச்சவும்.  ஜூஸ் ஜாரில் உதிர்த்த கோவா, ஆறிய பால், வெண்ணெய், மாம்பழக்கூழ் சேர்த்து நன்றாக அடிக்கவும். அதில் கலக்கிய  சோள மாவு (அல்லது) கஸ்டர்ட் கூழ் சேர்த்து நன்கு அடிக்கவும்.

அகலமான பாத்திரத்தில் விட்டு அதில் கரகரப்பாய் பொடித்த பாதாம், பிஸ்தா, ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த சேமியா கலந்து இதை குல்ஃபி மோல்ட் (அல்லது) சிறு டம்ளரில் விட்டு குல்ஃபி  Stick சொருகி Hi Freezer-ல் வைக்கவும். (Sweet gova  சேர்த்தால் சர்க்கரை வேண்டாம்.)