மாம்பழ ஜாம்



தேவையான பொருட்கள்

மாம்பழக்கூழ் - 1 கப், தோலுடன் கூடிய ஆப்பிள் கூழ் - 1 கப், சர்க்கரை - 1/2 கப், எலுமிச்சை சாறு - 1 பழம். (4 ஸ்பூன்).

செய்முறை

Non Stick வாணலியில் மாம்பழக்கூழ், ஆப்பிள் கூழ், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். 20 நிமிடம் கழித்து கெட்டிப்படும் தருவாயில் அடுப்பை Sim-ல் வைத்து மேலும் 20 நிமிடம் கிளறவும். பின் எலுமிச்சை சாறு விட்டு 2 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்தவும். சுவையான மாம்பழ ஜாம் தயார். வெளியில் பாட்டிலில் வைத்தால் 1 மாதமும் ஃபிரிட்ஜில் வைத்தால் சுமார் 2 மாதம் வரை கெடாது. எல்லா சிற்றுண்டிகளுக்கு சைடு டிஷ். தண்ணீர் கலந்து ஜூஸ் ஆகவும் பருகலாம்.