மாம்பழ மிட்டாய்



தேவையான பொருட்கள்

1 இஞ்ச் துண்டுகளாய் வெட்டிய மாம்பழம் - 1 கிலோ, சர்க்கரை - 1 கப்,
(100 கிராம்), கருப்பு உப்பு - 1/2 ஸ்பூன், சீரகத்தூள் - 1 ஸ்பூன்,
லவங்கத்தூள் - 1 ஸ்பூன், தண்ணீர் - 100 மில்லி.

செய்முறை

பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சர்க்கரையை கரைத்து கொதிக்க  விடவும்.  ஒரு கம்பி பதம் வருகையில் நறுக்கிய மாம்பழத் துண்டுகள், கருப்பு உப்பு, சீரகத்தூள், லவங்கத்தூள் கலந்து ஒரு டிரேயில் கொட்டி, 4 அல்லது 5 நாட்கள் வெயிலில் காய வைத்து டப்பாவில் போட்டுக் கொள்ளவும். சுவையான மாம்பழ மிட்டாய் தயார்.