மாம்பழ பர்பி



தேவையான பொருட்கள்

மாம்பழக்கூழ் - 1 கப், பாதாம், முந்திரி தலா - 25, நெய் - 1 குழிக்கரண்டி, தேங்காய் துருவல் - 1 கப், சர்க்கரை - 3/4 கப், மில்க் பவுடர் (அல்லது) கோவா - 100 கிராம், ஏலப்பொடி - 1 ஸ்பூன்.

செய்முறை

முதலில் பாதாம், முந்திரியை நெய்யில் வறுத்து, பொடித்துக்கொள்ளவும். பின்னர் தேங்காயை வறுக்கவும். சர்க்கரையை தூள் செய்யவும். கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து மாம்பழக்கூழ், பொடித்த சர்க்கரை போட்டு நன்கு கிளறவும்.

இறுகி வருகையில் மில்க் பவுடர் (அல்லது) கோவா சேர்த்து கிளறவும். நன்கு கலந்தவுடன் வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவல், தூள் செய்துள்ள பாதாம், முந்திரி, ஏலப்பொடி, மீதமுள்ள நெய் சேர்த்து கிளறவும். நன்கு பதம் வந்தவுடன் நெய் தடவிய டிரேயில் கொட்டி, ஆறியவுடன் துண்டுகளாய் கட் செய்யவும். சுவையான மாம்பழ பர்பி தயார்.