மாம்பழ பப்பட்



தேவையான பொருட்கள்

மாம்பழக்கூழ் - 1 கிலோ, சர்க்கரை - 400 கிராம், பட்டைத்தூள் - 1/2 ஸ்பூன், நெய் - 4 ஸ்பூன்.

செய்முறை

நான் Stick வாணலியில் மாம்பழக்கூழ், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். அதில் பட்டைத்தூள், ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கூழ் இட்லி மாவு பதம் வந்தவுடன் நிறுத்தவும். பின்பு நெய் தடவிய டிரேயில் மெல்லியதாய் பரப்பி ஆற வைத்து, 3 அல்லது 4 நாட்கள் வெயிலில் காய வைத்து பின் உரித்து சதுர சதுர வில்லைகளாய் கட் செய்து காற்று புகாத டப்பாக்களில் வைத்துக்கொள்ளவும். சுவையான மாம்பழ பப்பட் தயார்.