துப்பாக்கி : விமர்சனம்





நாற்பது நாட்கள் விடுமுறையில் வீட்டுக்கு வருகிற ராணுவ வீரரான விஜய், அந்த நாட்களில் பெண் பார்த்தோமா, கல்யாணம் பண்ணினோமா என்றில்லாமல் இந்தியாவுக்கே சவால் விடுகிற தீவிரவாதிகளைக் கண்டுபிடித்து அழிக்கிறார்.
இதுநாள் வரையில் விஜயகாந்த், அர்ஜூன் செய்த வேலையை இப்படத்தில் விஜய் செய்திருக்கிறார். தெரிந்த கதை. அதை சுவாரஸ்யமாக சொன்னவிதத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஜெயித்திருக்கிறார்.

படம் நெடுக கேள்விகள் இருக்கின்றன. ஆனால், பார்க்கும்போது அது தெரியவில்லை என்பது பலம். சினிமா மரபுப்படி இதில் கதாநாயகி காஜல் அகர்வாலுக்கு டூயட் பாடும் வேலை மட்டும்தான். நகைச்சுவைக்காக சத்யனும், ஜெயராமும் இருக்கிறார்கள். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு துல்லியம். பலவீனம் என்றால், அது இசைதான்.
துப்பாக்கி, குறி தப்பவில்லை.