அஜந்தா விமர்சனம்





நிஜத்தில், ஆக்ஷன் ஹீரோவாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருக்கும் ரமணாவுக்கு இந்தப்படத்தில் இசைக்கலைஞனாக வெற்றிபெற வேண்டும் என்று போராடுகிற வேடம். படம் சரியான நேரத்தில் வந்திருந்தால் அவருக்குப் பலமாக அமைந்திருக்கலாம். தயாரிப்பாளர் ராஜ்பா ரவிசங்கரே இயக்குநராகவும் மாறிவிடாமல் இருந்திருந்தால் படம் நன்றாகவே வந்திருக்கும். கதாநாயகியாக நடித்திருக்கும் ஹனிரோஸூம், கவர்ச்சி நாயகியாகத் தோன்றும் வந்தனா குப்தா வும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் சிரமமில்லாமல் செய்திருக் கிறார்கள். படத்தின் ஹீரோ, இளையராஜாதான்.

காசிகுப்பம் விமர்சனம்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியதுடன் தானே தயாரிப்பாளராகவும் இருந்ததால் மட்டுமே இந்தப்படத்தின் கதாநாயகனாகும் வாய்ப்பு அருணுக்குக் கிடைத்திருக்கிறது. அதனால் கீர்த்தி சாவ்லா, சௌம்யா ஆகிய இரண்டு நாயகிகளுடன் நடிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். ‘ஆடுகளம்’ நரேனும், லிவிங்ஸ்டனும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். பாலாஜி இசையில் தமிழமுதனும், சுரேகாவும் பாடல்களை எருதியிருக்கிறார்கள். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.