வாய்ப்பு கொடுத்த நிர்வாண போஸ்





கரண் ஜோஹர் இயக்கிய ‘ஸ்டூடன்ட் ஆப் தி இயர்’ படத்தில் தனது மனைவி கவுரி பெயரில் இணை தயாரிப்பில் ஈடுபட்டார் ஷாருக். படத்தில் ராதையை தரக்குறைவாக விமர்சிக்கும் வகையில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளதாம். இதையடுத்து கவுரி மீது ஒருவர் வழக்கு தொடர்ந்து விட்டார். தொண்டு நிறுவன புகாரின் பேரில் மும்பை போலீசும் அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. இதனால் டென்ஷன் அடைந்துள்ளார் ஷாருக்.

அவ்வப்போது நிர்வாண போஸ் தருவதாக மிரட்டி வந்தவர் பூனம் பாண்டே. திடீரென நிர்வாண போஸ் கொடுத்தும் பரபரப்பை ஏற்படுத்த முயன்றார். ஆனாலும் பலன் கிடைக்காமல் இருந்தது. தொடர்ந்து லைம்லைட்டில் இருந்ததால் இப்போது ‘நஷா’ படத்தில் ஹீரோயின் வேடம் ஏற்றிருக்கிறார் பூனம் பாண்டே.

களிமண் மலையாள படத்துக்காக தனது நிஜ பிரசவ காட்சியை படமாக்க அனுமதி தந்தார் ஸ்வேதா மேனன். இது பற்றி அறிந்ததும் ஸ்வேதா மேனனை தைரியமான, போல்டான பெண் என பாராட்டியிருக்கிறார் பிபாஷா பாசு.

அண்ணன் சைப் அலிகானின் திருமணம் முடிந்துவிட்டதால் சந்தோஷமாக உள்ளார் சோஹா அலிகான். விரைவில் நடிகரும் தனது காதலருமான குணாலே கேமுவை திருமணம் செய்துகொள்ள அவர் முடிவு செய்துள்ளார்.

ராஜ்குமார் குப்தா இயக்கும் கன்சக்கர் படத்துக்காக உடல் எடையை கூட்டி குண்டாகியுள்ளார் வித்யாபாலன். ‘கஹானி 2’ பட ஷூட்டிங்கில் அடுத்த ஆண்டு மே முதல் பங்கேற்கிறார். அப்படத்துக்காக உடல் எடையை குறைக்க முடிவு செய்துள்ளார்.
- ஜியா