ஒரு புலி வாலிபன் பயணம்





ஆஸ்கருக்கு அடுத்து உலகளவில் போற்றப்படும் விருது, அகடமி விருது. இந்த விருதை வாங்கியிருப்பவர், ஆங் லீ. ‘பாயும் புலி பதுங்கும் நாகம்’ படத்தை இயக்கியிருந்தாரே... அவரேதான். அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்தான் ‘லைப் ஆஃப் பை’ 3டி படம்.

புகழ்ப் பெற்ற எழுத்தாளரான யான் மார்டெல் எழுதிய ‘லைப் ஆஃப் பை’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் கதை சுவாரஸ்யமானது. ஒரு இளம் வாலிபனும் ஒரு வங்க தேசத்து புலியும் சந்தர்ப்பம் காரணமாக ஒன்றாக கடலில் பயணம் செய்கிறார்கள். அப்போது வாலிபன் எதிர்கொள்ளும் பிரச்னைகள்தான் முழு படமும். சூரஜ் சர்மா, இர்பான் கான், தபு உட்பட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை இந்தியா முழுவதும் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பாக்ஸ் ஸ்டார் இந்தியா நிறுவனம் வெளியிடுகிறது.