சமந்தா வெளியே ஸ்ருதி உள்ளே





அதேதான். ‘தேதிகள் இல்லாததால்...’ இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர் படங்களில் இருந்து வெளியேறியதாக சமந்தா சொன்னார். அதை மீடியாவும் நம்பியது. ஆனால், இந்த முறை அப்படி எதுவும் சொல்ல முடியாத இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கிறார், சமந்தா.

ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் தெலுங்குப் படம், ‘யவடு’. இந்தப் படத்தின் நாயகியாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர், சமந்தா. இப்போது அவரை தயாரிப்பாளர் அதிரடியாக நீக்கி விட்டு ஸ்ருதி ஹாசனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்! இந்த நீக்கத்தை சற்றும் எதிர்பார்க்காத சமந்தா ஆடிப் போயிருக்கிறார். நீக்கத்துக்கான காரணம், சமந்தா வின் முகத்தில் தெரியும் முதுமை என்கிறார்கள். அட, ராமா!