ஷட்டப் யுவர் மவுத்





பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் தியாகராஜ னின் மகன் ரவி தியாகராஜன் இயக்கும் படம் ‘என்னமோ ஏதோ’. இதன் நாயகன் கவுதம் கார்த்திக். நாயகிகள் ரகுல் பிரீத், நிகிஷா பட்டேல். முக்கிய வேடத்தில் பிரபு. ‘என்னமோ ஏதோ’ ஹிட் பாடலை எழுதிய மதன் கார்க்கி, இந்தப் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.
இசை டி.இமான்.

‘‘இது காமெடி, ரொமான்ஸ் கலந்த படம். தமிழில் எனக்கு இது முக்கியமான படமாக இருக்கும். இதற்கு முன் நடித்த ‘தடையற தாக்க’, ‘புத்தகம்’ ஆகிய படங்கள் என்னுடைய அடையாளமாக இருந்தாலும் இந்தப் படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும். ஏனெனில் அந்தளவுக்கு என்னுடைய கேரக்டர் பவர்ஃபுல்லாக இருக்கும். ஒருவகையில் வெயிட் ரோல் என்று கூட சொல்லலாம்.

கவுதம் கார்த்திக்குடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. சினிமா பின்னணி உள்ளவராக இருந்தாலும் பந்தா இல்லாமல் பழகக்கூடியவர். இதில் அவரது ரோல் ஸ்டைலிஷ்ஷாக இருக்கும். அதேபோல் நிகிஷா பட்டேலின் கேரக்டர் சுவாரஸ்யமாக இருக்கும். இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இருந்தாலும் ஜாலியான படமாக இருக்கும்.


இப்போது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இசையமைப்பாளராக இருக்கும் டி.இமான் இந்தப் படத்துக்காக ஸ்பெஷலாக பாடல்களைக் கொடுத்துள்ளார். அனிரூத் பாடியுள்ள ‘நீ என்ன அப்பாடக்கர்...’, ஸ்ருதிஹாசன் பாடியுள்ள ‘ஷட்டப் யுவர் மவுத்...’ உட்பட அனைத்து பாடல்களும் பட்டையை கிளப்பும். இயக்குநர் பிரியதர்ஷனிடம் சினிமா பயின்ற இயக்குநர் ரவி தியாகராஜனின் திறமை அனைவரையும் வியக்க வைக்கும்...’’ என்கிறார் ரகுல் பிரீத்.
- எஸ்