ஆரம்பம்





நண்பனைக் கொன்ற துரோகிகளை அஜித் பழிவாங்குவதுதான் படத்தின் ஒன் லைன். ஆனால், இந்த ஒரு வரிக்கதையை நேர்வழியில் சொல்லாமல் கட்டிப் போடும் திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்கள்.

வெள்ளை நிறத்தில் தாடி, மீசை, கூலிங் கிளாஸ், ஒன்றிரண்டு டீஷர்ட் - இதுதான் அஜித்தின் ஒட்டுமொத்த கெட்டப். ஆனால், இந்த எளிமைதான் அஜித்தை காட்சிக்கு காட்சி ரசிக்க வைக்கிறது. ஆவேசமான டயலாக் இல்லை. அனல் பறக்கும் சண்டை இல்லை. ஆனாலும் தல ஸ்கிரீனில் வரும் போது ரசிகர்களின் ஆரவாரத்தால் தியேட்டர் அதிர்கிறது. நயன்தாராவுக்கு புகழாரம் சூட்ட ஹோட்டல் காட்சி ஒன்று போதும்.

ஆர்யாவின் ஸ்மார்ட் நடிப்பு வாவ். டாப்ஸியும் முடிந்தளவுக்கு ஸ்கோர் பண்ணுகிறார். கொஞ்ச நேரம் வந்தாலும் மனதைத் தொடுகிறார் டகுபதி ராணா. மகேஷ் மஞ்ச்ரேக்கர், அதுல் குல்கர்னி, கிஷோர் என மூன்று வில்லன்களில் மகேஷ் மஞ்ச்ரேக்கருக்கு முதலிடம் தரலாம். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு சபாஷ். எழுத்தாளர் சுபா, இயக்குநர் விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் கதையும் திரைக்கதையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.