அம்சவிர்தன்





மறைந்த ‘வெள்ளி விழா’ நாயகன் ரவிச்சந்திரனின் மகன். பி.காம் முடிக்கவில்லை. ரவிச்சந்திரன் டைரக்ஷனில் ‘மானசீக காதல்’ படத்தில் அண்ணன், தம்பியாக இரட்டை வேடங்களில் ஹீரோவாக அறிமுகமானார். மீண்டும் ரவிச்சந்திரன் டைரக்ஷனில் ‘மந்திரன்’ படத்தில் நடித்தார்.

ரவிச்சந்திரன் நடித்த ‘அதே கண்கள்’, ‘பாக்தாத் பேரழகி’ படங்களின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படுகிறார். படம் தயாரிக்க வேண்டும், டைரக்டராக வேண்டும் என்பது லட்சியம்.

‘வடுகப்பட்டி மாப்பிள்ளை’ படத்தில் நடித்தபோது, ஹீரோயின் ரேஷ்மாவை காதலித்து மணந்தார். ரேஷ்மாவின் பெயர் இப்போது ‘சாந்தி’ ஆகிவிட்டது. சாய் அம்ரேஷ், அகிலேஷ் என்ற மகன்களும், அனன்யா என்ற மகளும் உள்ளனர்.

நான்கு வீல்கள் கொண்ட மலை ஏறும் பைக் ஓட்டுவது, இரண்டு வீல்கள் கொண்ட சகதியில் செல்லும் பைக் ஓட்டுவது பொழுதுபோக்கு. வட இந்தியாவிலுள்ள மலைகள் மற்றும் ஏற்காடு, கொடைக்கானல் மலைகளில் பைக் ஓட்டி சாகசம் செய்துள்ளார்.

தமிழிலும், தெலுங்கிலும் நடித்துள்ளார். பல வருடங்கள் நடிக்காமல் இருந்தார். மீண்டும் ஜனவரியில் நடிக்க வருகிறார்.
- தேவராஜ்