பாண்டிய நாடு





சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த விஷால் ஒரு விபத்தில் தன் அண்ணனை பறிகொடுக்கிறார். ஒரு கட்டத்தில் அண்ணனுடைய மரணம் திட்டமிட்ட சதி என்று தெரிய வருகிறது. அண்ணனைக் கொலை செய்த சதிகாரர்களை விஷால் எப்படி சாதுர்யமாக பழி தீர்க்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.

பயந்தாங்கொள்ளியாக வரும் விஷால் எப்போது சண்டைக்கோழியாக மாறப் போகிறார் என்று ஏங்க வைக்கிறார். லக்ஷ்மி மேனன் திருமணத்துக்கு முன் ரிகர்சல் பார்க்கலாமா என்று கேட்கும் காட்சியில் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறார். அப்பாவாக வரும் பாரதிராஜா தனி முத்திரை பதிக்கிறார். நடு ராத்திரியில் நடுங்கும் குரலில் நண்பனைச் சந்திக்க வரும் ஒரு காட்சிக்காகவே அவரை கொண்டாடலாம். வில்லனாக வரும் சரத் லோகித் அஸ்வா மிரள வைக்கிறார். இமான் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கச்சிதம். மதியின் மென்மையான ஒளிப்பதிவு படத்துக்கு பலம். இயக்குநர் சுசீந்திரன், மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கிறார்.