அழகுராஜா





வாழ்க்கையில் மிகப் பெரிய டி.வி அதிபராக வரவேண்டும் என்பதுதான் கார்த்தியின் லட்சியம். ஆனால், அந்த லட்சியம் காஜல் அகர்வாலை பார்த்ததும் பஞ்சு போல் பறக்க ஆரம்பித்துவிடுகிறது. என்றாலும் கார்த்திக் வீசும் வலையில் சிக்காமல் டிமிக்கி கொடுக்கிறார் காஜல். கார்த்தியின் காதல் வெற்றியா, தோல்வியா என்பது மீதிக் கதை.

அடுத்த வீட்டுப் பையன் போல் யதார்த்தமாக கார்த்தி லந்து பண்ணும் காட்சிகள் செம ரகளை. காஜல் அகர்வால் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார். படம் முழுக்க சந்தானம் இருந்தும் முட்டி மோதிதான் சிரிப்பு வருகிறது. பிரபு, நாசர், கோட்டா சீனிவாசராவ், ராதிகா ஆப்தே, சரண்யா பொன்வண்ணன் என அனைவரும் கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்து முடித்துள்ளார்கள். தமன் இசையில் பாடல்கள் ஓகே. சக்தி சரவணனின் ஒளிப்பதிவு நேர்த்தி. காமெடி படத்துக்கு டயலாக் மட்டும் போதும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையில் களமிறங்கும் ராஜேஷ்.எம், கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.