களவாணி காதல்



ஏராளமான இயக்குனர்களிடம் சினிமா பயின்ற குமரேசன் இயக்கும் படம் 'கன்னக்கோல்'. இதன் நாயகன் பரணி. நாயகி காருண்யா. 'சொல்லாமலே' படத்துக்கு இசையமைத்த பாபி இசையமைக்கிறார். உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் படம் இது. களவாணி பையனுக்கும் நாடோடிப் பெண்ணுக்கும் உள்ள காதலை சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தமாகச் சொல்லி இருக்கிறார்களாம்.

'என்றென்றென்றும் புன்னகை' உட்பட ஏராளமான படங்களை தயாரித்த ராம் பிக்சர்ஸ், இயக்குனர் சொன்ன கதையில் மட்டும் திருப்தியாகாமல் இயக்குனரின் திறமையை அறிய டெஸ்ட் ஷூட் நடத்தினார்கள். தயாரிப்பு நிறுவனம் நடத்திய அனைத்துத் தேர்விலும்  பாஸான பிறகுதான் ஷூட்டிங் நடத்த இயக்குனருக்கு க்ரீன் சிக்னல் கிடைத்ததாம்.

'தயாரிப்பு நிறுவனம் எனக்கு வைத்த டெஸ்ட் யூஸ்புல்லா இருந்தது. படப்பிடிப்புக்கு முன் அனைத்து நடிகர்களையும் கதைக்குள் கொண்டு வருவதற்கு உதவியாக இருந்தது. பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே சாத்தியமாகக்கூடிய தொழில்நுட்ப வசதி களை செய்து கொடுத்தார்கள். நூறு சதவீதம் இது ஜனரஞ்சகமான படமாக இருக்கும்' என்கிறார் இயக்குனர் குமரேசன்.

எஸ்