கல்யாண புரிதல்



‘திருமணம்னா கணவன், மனைவிக்கிடையே சண்டை சச்சரவு வரும்ங்கற நிலைதான் இருக்கிறது. மனைவியின் கருத்தை கேட்க கணவனுக்கு நேரமில்லை. கணவனின் கருத்தை கேட்க மனைவியும் தயாராக இருப்பதில்லை. இதுதான் இன்றைய பெரும்பான்மையான குடும்பங்களில் நடக்குது. திருமணத்துக்குப் பிறகு கணவன் மனைவிக்கிடையே எந்தளவுக்கு புரிதல் வேண்டும் என்பதைத்தான் ‘நளனும் நந்தினியும்’ படத்தில் சொல்கிறேன்’ என்கிறார் இயக்குனர் வெங்கடேசன்.


‘இது மென்மையான காதல், குடும்பம் கலந்த கதை. துளிக் கூட விரசம், ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத படம். ஹீரோ மைக்கேல், நாயகி நந்திதா. ரெண்டு பேருமே சிறப்பா நடிச்சிருக்காங்க. இவங்கதான் படத்தோட ஹைலைட். அதை சரியாக புரிந்தவர்களாக பிரமாதமாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

சூரிக்கு நாலைந்து டிராக்குக்கு மட்டும் வந்து போகாமல் கதையுடன் கலந்த கேரக்டர். வழக்கமான நகைச்சுவையைத் தாண்டி ஸ்ட்ராங் எமோஷனல் கேரக்டரில் நடித்திருக்கிறார். நிஜத்திலும் அவர் எமோஷனல் மனிதர் என்பதால் பின்னியெடுத்துள்ளார். இந்தப் படத்துல என்னுடன் வேலை செய்யும் கேமராமேனும், எடிட்டரும் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் என்னுடைய பேட்ச்மேட்ஸ். நண்பர்களாக இணைந்து வேலை செய்வது மகிழ்ச்சியாக உள்ளது’ என்கிறார்  வெங்கடேசன்.

எஸ்