டென்ஷன் மம்தா



கேன்சர் ட்ரீட்மென் டுக்கு சென்று கொண்டிருப்பதால் தற்காலிகமாக நடிப்புக்கு லீவு கொடுத்திருக்கிறார் மம்தா. ஆனால், 'மேக்னா ராஜுடன் அவர் ஒரு படத்தில் நடிக்கிறார். போலீஸ் அதிகாரி வேடம்.

அநீதிக்கு எதிராகக் கொதித்தெழும்பும் கேரக்டர். இதை ராஜேஷ் இயக்குகிறார்' என்று மலையாள சேனல் ஒன்றும் ஆங்கில நாளிதழ் ஒன்றும் போட்டி போட்டுக்கொண்டு செய்தி வெளியிட கடுப்பாகிவிட்டார் மம்தா. 'ஏங்க ஒரு தகவல்னா கன்பார்ம் பண்ணி போடமாட்டீங்களா? அப்படியொரு படம் பற்றி எனக்கே தெரியாது' என்று டென்ஷனாக ட்வீட்டியிருக்கிறார். அதோடு அந்த சேனலுக்கும் பத்திரிகைக்கும் எச்சரிக்கை வேறு.

பிச்சிருவேன் பிச்சி! ஒல்லி பாமா

உடல் எடையைக் கூட்டுவது குறைப்பது எல்லாம் ஹீரோக்கள் மட்டும்தான் செய்வார்களா என்ன? ஹீரோயின்களும் அந்த வேலையில் இறங்கிவிட்டனர். தமிழில் 'எல்லாம் அவன் செயல்', 'சேவற்கொடி' படங்களில் நடித்த பாமா, மலையாள நடிகை. இவர் 'ஒட்ட மந்தாரம்' என்ற படத்தில் நடித்துவருகிறார். ஆந்திராவில் ஒரு குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவக் கதையான இதில், 15 வயது சிறுமியாக நடிக்கிறார் பாமா. ஏற்கனவே குழந்தை போல் இருக்கும் பாமா, இதில் நடிப்பதற்காக உடலை இன்னும் ஸ்லிம் ஆக்க பயிற்சி செய்துவருகிறார்.
ஒல்லிகுச்சி உடம்புக்காரி.

போபனின் ஆசை

தமிழில் விஜய், ஷாலினி நடித்த 'காதலுக்கு மரியாதை' படத்தின் ஒரிஜினல், 'அனியாதிப்ராவு'. இதில் குஞ்சாக்கோ போபனும் ஷாலினியும் ஜோடியாக நடித்திருந்தார்கள். அப்போது மலையாள இண்டஸ்ட்ரியில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஜோடி இது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்கிற ரீதியில் செய்திகளும் கிளம்பியிருந்தன. பிறகு அஜீத்தை திருமணம் செய்த பின் நடிப்புக்கு முழுக்குப் போட்டார் ஷாலினி.

இந்நிலையில் நடிப்புக்கு கொஞ்சம் இடைவெளி விட்டிருந்த போபன், மீண்டும் வந்திருக்கிறார். அவருடைய ரகசிய ஆசை, 'ஷாலினியுடன் நடிக்க வேண்டும்’ என்பது. 'ஷாலினி மீண்டும் நடிக்க வந்தால் அவருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது ஆசை' என்றிருக்கிறார் போபன்.  ஷாலினிகிட்ட சொல்லுங்க.

டாப் ஹீரோயின் ஆகும் அமலா

அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் லிஸ்ட்டில் இப்போது முன்னணியில் இருக்கிறார் நயன்தாரா. அவரைப் பின்பற்றியிருக்கிறார் அமலா பால். தெலுங்கில் அவர் நடிக்கும் 'வஸ்தா நீ வேணுகா' என்ற படத்துக்கு ஒரு கோடி ரூபாய் வாங்கி இருக்கிறார். இதனால் டாப் ஹீரோயின்கள் லிஸ்ட்டில் இடம் பிடிக்க நினைக்கிறாரா என்று கேட்டால், 'இது என்னன்னே புரியலை. சம்பளத்தை வச்சு எப்படி டாப் ஹீரோயின் அது இதுன்னு சொல்றீங்க. அந்த தெலுங்குப் படத்தோட ஷூட்டிங் வெளிநாட்டுல நடக்குது. அதை கமிட் பண்ணினா அடுத்த படங்கள்ல நடிக்க முடியாது. அதனாலதான் அதிக சம்பளம் கேட்டேன். கொடுத்தாங்க. இதை வச்சு டாப், டாப் இல்லைன்னு நீங்களாகவே கற்பனை பண்ணிக்கிறீங்க. போங்க' என்கிறார் அமலா பால். அவர் சொன்னா சரிதான்.