நமீதாவின் கல்யாண சிந்தனை!



தமிழில் நமீதா நடித்து ரிலீசான கடைசிப் படம், ‘இளைஞன்’. நல்ல வாய்ப்புகள் அமையாததால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்று சொல்லும் அவர், தற்போது உடல் எடையைக் குறைத்துள்ளார். கன்னடத்தில் மட்டும் நடிக்கிறார்.

அவரது திருமணம் குறித்த வதந்திகளைப் படித்து வாய்விட்டுச் சிரிக்கும் அவர், ‘இப்ப என் கல்யாணத்துக்கு அவசரம் இல்ல. ‘எப்ப எனக்கு சினிமா வாய்ப்பு குறையுதோ, அப்ப ஒரு நல்லவனைப் பார்த்து கல்யாணம் பண்ணி செட்டிலாயிடுவேன்’னு நான் சொன்னதா சிலர் எழுதறாங்க. அப்படி நான் சொல்லவே இல்ல. இப்ப என் கல்யாணத்தை பற்றி எந்த சிந்தனையும் கிடையாதுன்னுதான் சொன்னேன்’ என்கிறார்.