அஞ்சலியிடம் அதிரடி மாற்றம்!



ஸ்ரேயாவுக்கு நடிப்பு வாய்ப்பு இல்லை. ஆனால், ஃபேஷன் ஷோக்களில் பிசியாக இருக்கிறார். எந்த விழாவுக்கு ஆட அழைத்தாலும், முகம் சுளிக்காமல் வந்து ஆடுகிறார். ஆனால், சம்பளம் மட்டும் விண்ணுக்கு எகிறுகிறது. 20 முதல் 25 லட்சம் வரை எதிர்பார்க்கிறாராம்.

ஜெயம் ரவியுடன் நடிக்கும் ‘அப்பாடக்கர்’ படத்துக்காக வந்த அஞ்சலி, திடீரென்று சதை போட்டுள்ளார். உடற்பயிற்சி செய்வதை குறைத்து விட்ட தால் உடல் எடை கூடியுள்ளதாக சொன்ன அவர், விமலுடன் நடிக்கும் ‘மாப்ள சிங்கம்’ படப்பிடிப்பில் சின்ன மாற்றத்துடன் காணப்படுகிறார். சாப்பிடு வது, தூங்குவது, உடற்பயிற்சி செய்வது என, அனைத்திலும் செய்த மாற்றம்தான் இதற்கு காரணம் என்கிறார்.