சரத் - ஓவியாவின் லவ் போர்ஷன்!



“ஏ.வெங்கடேஷ் படம் என்றதும் ரசிகர்கள், ‘மசாலா தூக்கலாக இருக்கும்’ என்று டிஸ்லைக் போடுவார்கள். ஆனால் ‘சண்டமாருதம்’ படம் பார்த்த பிறகு எல்லோரும் ‘லைக்’ போடுவார்கள்” என்கிறார் இயக்குனர் ஏ. வெங்கடேஷ். கமர்ஷியல் இயக்குனர்களில் முக்கியமானவர். ‘சண்டமாருதம்’ என்ன ஸ்பெஷல்?

வழக்கமாக என்னுடைய படங்களில் கமர்ஷியல் அயிட்டங்கள் அதிகமாக இருக்கும். இதில் அடக்கி வாசித்திருக்கிறேன். மற்றபடி இந்தப் படத்தில் சரத்குமார் ஹீரோ, வில்லன் என டபுள் ஆக்ஷனில் நடித்திருக்கிறார். அதுவும் 34 வருடத்துக்குப் பிறகு வில்லனாக நடிக்கிறார். வில்லன் கெட்-அப்புக்காக மும்பையிலிருந்து ஸ்பெஷல் மேக்-அப்மேனை வரவழைத்து படமாக்கியுள்ளோம். அவருக்கு நாள் ஒன்றுக்கு சம்பளம் 1 லட்சம் ரூபாய்.

பின்னே? சல்மான்கான் மேக்-அப்மேன் என்றால் சும்மாவா! க்ளைமாக்ஸ் ஃபைட்டை மட்டும் பதினைந்து நாட்கள் எடுத்தோம். அந்தக் காட்சிக்காக 10 நாட்கள் ஒத்திகை நடந்தது. 2 நாட்கள் மாதிரி படப்பிடிப்பு நடத்தி, அதை எடிட் பண்ணி பார்த்த பிறகுதான் படப்பிடிப்பு நடத்தினோம். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் பண்றோம். தெலுங்கு டைட்டில் பெயர் ‘சர்வேஷ்வர்’.

ஓவியாவுக்கு என்ன கேரக்டர்?


நீங்க ஓவியா வின் கிளாமர் ஸ்டில்ஸை பார்த்து கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கிளாமர் மட்டும் இல்லாமல் நடிப்புக்கும் முக்கியத்துவம் உள்ள கேரக்டர் பண்ணியிருக்கிறார். சரத், ஓவியா லவ் போர்ஷனை யாரும் விமர்சனம் பண்ண முடியாதளவுக்கு மிகவும் கவனமாக எடுத்திருக்கிறேன். மீரா நந்தன் கேரக்டரும் பேசப்படுமளவுக்கு இருக்கும். இது நல்ல போலீஸுக்கும் கெட்டவனுக்குமிடையே நடக்கும் கதை. வழக்கமான திரைக்கதை இருக்காது. வேறுபட்ட திரைக்கதையை பார்க்கலாம்” என்று  நம்பிக்கை தருகிறார் ஏ.வெங்கடேஷ்.

-எஸ்