ஜோடி சேர்ந்தாச்சி!



கடந்த ஜனவரியில் தொடங்கி மே மாதம் வரை பதிமூன்று நட்சத்திரங்கள் காதல் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்வில் குதித்திருக்கிறார்கள். ‘வண்ணத்திரை’ வாசகர்களின் பொதுஅறிவை மேம்படுத்த அந்தப் பட்டியலைத் தருகிறோம்.



* பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன்.
* பாண்டியராஜன் மகனான நடிகர் பிருத்விராஜன் - அக்‌ஷயா.
* தேவயானியின் தம்பியும் நடிகருமான நகுல் - ஸ்ருதி பாஸ்கர்.
* ‘கயல்’ சந்திரன் - டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அஞ்சனா.
* சங்கவி - தனியார் சாஃப்ட்வேர் நிறுவன இயக்குனர் என்.வெங்கடேஷ்.
* ரஸ்னா பேபி அங்கீதா - தொழிலதிபர் விஷால் ஜெகதாப்.
* ‘சச்சின்’ பிபாஷா பாசு - இந்தி நடிகர் கரண் சிங் குரோவர்.
* ‘இந்தியன்’ ஊர்மிளா மடோன்ட்கர் - காஷ்மீரைச் சேர்ந்த தொழிலதிபர் மோஷின் அக்தர் மிர்.
* ‘அரவான்’, ‘ஞானகிறுக்கன்’ அர்ச்சனா கவி - மலையாள காமெடி நடிகர் அபிஸ் மேத்யூ.

மேலும் சில ஜோடிகள்...

* ‘இனிது இனிது’ சரண் குமார் - நேகா.
* கஜாலா - பாலிவுட் டி.வி நடிகரும் போட்டோகிராபருமான பைசல் ரசாகான்.
* ‘உயிரே’ பிரீத்தி ஜிந்தா - ஜென் குட் எனஃப்.
* ‘கல்லூரி’ அகில் - சுகாசினி.
* ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ டாக்டர் சேதுராமன் - உமையாள்

மணமக்கள் அத்தனை பேரும் பல்லாண்டு காலம் நீடூழி வாழ ‘வண்ணத்திரை’ வாசகர்கள் சார்பில் வாழ்த்துகள்!

- தேவராஜ்