இணைய தலைமுறை



தேர்தல் கலாட்டா!

ஒரே கல்லூரியில் படிக்கும் அஸ்வின் குமார், மனிஷா ஜித் இருவரும் நண்பர்களாக அறிமுகமாகி காதலர்களாக பழகுகிறார்கள். அந்த சமயத்தில் கல்லூரித் தேர்தல் வருகிறது. கல்லூரித் தேர்தல் மூலமாக அரசியல் பதவி அடைய குறுக்கு வழியில் முயற்சி செய்கிறார் சஞ்சய். அவரை எதிர்த்து ஜனநாயக முறையில் அஸ்வின் குமார் களமிறங்குகிறார்.



இருவரில் யாருக்கு வெற்றி, அஸ்வின் குமாரின் காதல் என்ன ஆனது போன்ற கேள்விகளுக்கு எப்படி விடை சொல்லுகிறார்கள் என்பதே இப்படம். அஸ்வின் குமாருக்கு சற்றே அழுத்தமான ரோல். முன் அனுபவம் இருப்பதால் சமாளித்திருக்கிறார். மனிஷா ஜித்துக்கு வழக்கமான பாத்திரம். நெகடிவ் கேரக்டருக்கு சஞ்சய் பொருந்துவது சிறப்பு.

கோபிநாத் இசையில் ‘ஹைக்கூ’ பாடல் தேறுகிறது. ஆரோவின் கேமரா கல்லூரி வாழ்க்கையை விறுவிறுப்பாகக் காட்டியிருக்கிறது. கல்லூரிக் கதையில் கும்மியடித்து கும்மாளம் அடிக்காமல் சமுதாயத்துக்கு தேவையான கருத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர் இளந்திருமாறன்.