ஜம்புலிங்கம் 3D



மேஜிக்! மேஜிக்!!

ஹீரோ கோகுல்நாத், ஒரு பிரசித்தி பெற்ற மேஜிக்நிபுணரின் அசிஸ்டென்ட். ஜப்பானில் மேஜிக் ஷோ நடத்தப் போகிறார்கள். அங்கே சில பிரச்னைகள். மேஜிக் மாஸ்டர் உடல்நலம் குன்றி ஷோ நடத்த முடியவில்லை. எல்லாப் பிரச்னைகளையும் கோகுல் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் ‘ஜம்புலிங்கம்’ படத்தின் கதை.



கோகுல்நாத் வழக்கம்போல தன்னுடைய பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார். அஞ்சனா கீர்த்தியின் கிளாமர் 3டியில் மிரட்டுகிறது. வயதானாலும் சுகன்யாவின் அழகு குன்றவே இல்லை. 3-டி எஃபெக்ட் காட்சிகளை பிரமாதமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ். இசையமைப்பாளர் ஸ்ரீவித்யாவின் இசையில் பாடல்களும், வெங்கட் பிரபு ஷங்கரின் பின்னணி இசையும் படத்துக்கு பலம். ‘அம்புலி 3-டி’ கொடுத்த ஹரி - ஹரீஷ் இரட்டை இயக்குனர்கள் மீண்டும் குழந்தைகள் கொண்டாடும் வகையில் அட்டகாசமான படத்தைத் தந்திருக்கிறார்கள்.