‘நோ’ சொன்னார் ஸ்ரீதேவி!



* சஞ்சய்தத் வாழ்க்கையைத் தழுவிய கதையில், அவரது ரோலில் நடிக்கும் ரன்பீருக்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனே, கேத்ரினா கைஃப் இருவரிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.
* “உணவில் பச்சை காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொண்டு, ஓவர் டயட் கடைப்பிடிக்கிறார் அக்‌ஷய்குமார்” என்று சொல்கிறார் அபிஷேக் பச்சன்.



* ‘தீன்’ படத்தில் அமிதாப்பச்சனுடன் வித்யா பாலன் நடித்துள்ளார். இப்படம் ‘த்ரிஷ்யம்’ (தமிழில் ‘பாபநாசம்’) படத்தின் பாணியிலான த்ரில்லர் திரைக்கதையாம்.
* சமீபத்தில் சல்மான்கான் அளித்த பார்ட்டியில் அவரது பழம்பெரும் காதலி சங்கீதா பிஜ்லானி கலந்துகொண்டது பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
* ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை தனது படத்தில் அறிமுகப்படுத்த ராம்கோபால் வர்மா கேட்டாராம். ஆனால் ஸ்ரீதேவி ‘நோ’ சொல்லிவிட்டாராம்.


- ஜியா