Data Corner
 *சர்வதேச அளவில் நாளொன்றுக்கு சுமார் 100 மில்லியன் பேரல் எண்ணெய் உற்பத்தி ஆகிறது. *13 லட்சம் போர் வீரர்களும், 10 லட்சம் பொதுமக்களும் வியட்நாம் போரில் உயிரிழந்துள்ளனர்.
*புலிகளின் உறுமல் சத்தம் 3 கிலோமீட்டர் தூரம்வரை கேட்கும்.
*ஆப்பிரிக்க கண்டத்தின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் நைஜீரியாவில் வாழ்கின்றனர்.
*பயணிகள் விமானம் சராசரியாக மணிக்கு 550 மைல் வேகத்தில் பறக்கிறது.
*2019ம் ஆண்டில், உலகளாவிய ஆற்றல் தொடர்பான கார்பன் டை ஆக்சைடு (CO2) உமிழ்வுகளில் 30% நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி காரணமாக இருந்தது.
*ஐரோப்பிய நாடுகளிலேயே மதுபான பார்கள் அதிகம் நிறைந்த நாடாக ஸ்பெயின் உள்ளது.
*உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபா, 828 மீட்டர் உயரம் கொண்டது. இக்கட்டடத்தில் உள்ள கண்ணாடி ஜன்னல்களை ஒருவர் முழுமையாக துடைத்து முடிக்க 3 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
சுடர்க்கொடி
|