ரெயின் கோட் மாடல்கள்!
இந்தப் பக்கம் பார்த்தால் சோனு மழை... அந்தப் பக்கம் பார்த்தாலும் சோனு மழை... சரி பின்னாடி திரும்பிப் பார்த்தா அங்கயும் மழை...’ இப்படி வடிவேல்

டயலாக் மாதிரி நவம்பர் - டிசம்பரில் வெளுத்து வாங்குகிறது மழை.ஸோ, இயல்பாகவே மக்களின் பிரதான உடையாக ரெயின் கோட் மாறிவிட்டது.
உடனே மழை பொழியும் நாட்டு மக்கள்தான் ரெயின் கோட்டை பயன்படுத்துகிறார்கள் என தப்புக் கணக்கு போட்டுவிடாதீர்கள்! உலகம் முழுக்க மழையே இல்லாத நாடுகளில்கூட ரெயின்கோட்டுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

அமேசான் காடுகளில் வாழ்ந்த ஆதிவாசிகள் அதிக மழையின் காரணமாக அதிலிருந்து பாதுகாக்க பல நூறு வருடங்களுக்கு முன்பே ரெயின் கோட் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்!
விலங்குகளின் தோல், இலைகளைத் தொடர்ந்து ரப்பர் மாதிரியான தண்ணீர் கசியாத மெட்டீரியலில் ரெயின்கோட் செய்துவிட்டார்கள். கிபி1500களில் முறையாகத் தைத்து அணியும் வடிவத்தை ஐரோப்பிய நாடுகள் ஆராய்ச்சி செய்யத் துவங்கினர். பிரான்கோயிஸ் நீயும் என்பவர் கிபி 1748ல் அதிகாரபூர்வமான ரெயின் கோட்டை உருவாக்கினார்.
ஆனால், 1821ல் லண்டனைச் சேர்ந்த ஜி பாக்ஸ் என்னும் நிறுவனம் தயாரித்த ரெயின்கோட்டே அதிகாரபூர்வமான ரெயின்கோட்டாக அறிவிக்கப்பட்டது. அப்போது இதற்கு பெயர் பாக்ஸ் அப்பா டிக் . ஆரம்ப காலங்களில் ரப்பர் மெட்டீரியலைக் கொண்டுதான் ரெயின் கோட்டை தைத்தார்கள். இது குளிர், வெப்பம் இரண்டுக்கும் செட்டாகவில்லை. உடலோடு வேறு ஒட்டிக் கொண்டது. ஸோ, முதல் முயற்சி ஃபெயிலியர்!
இந்த நேரத்தில்தான் பிளாஸ்டிக் உலகின் ராஜாவான சீனா இதற்குள் நுழைந்தது. விளைவு, 1823க்குப் பிறகு ஏகப்பட்ட வெரைட்டிகளில் ரெயின்கோட் வரத் தொடங்கியது. ஓகே... இப்போது என்னென்ன மாடல்கள் ரெயின் கோட்டில் உள்ளன?
கிளாசிக் ரெயின் கோட்
பளிச்செனத் தெரியும் கலர்களில் வரும் பிளாஸ்டிக் ரெயின் கோட், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீண்ட அங்கி போல் அணியும் உடை. பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில்தான் வரும்.
ரெயின் கோட்
பெண்களுக்காக பிரத்தியேகமாக கண்டுபிடிக்கப்பட்ட வகை. ஆனால், அதிக காற்று, அதிக கனமழையில் பாட்டம் முழுவதும் நனைந்து விடும். இதற்காகவே சீனர்கள் கண்டு பிடித்ததுதான் இந்த ரெயின் கோட் ஸ்கர்ட்.
போன் ஷோஸ்
அதாவது தலை முதல் தோள்பட்டை, கைகள் என்ன மொத்த உடலுக்கும் மேல்பகுதியில் கூடை போல் போர்த்திக் கொள்ளும் வகையறாக்கள்தான் இந்த போன் ஷோஸ். இது பெரும்பாலும் முட்டிவரை நனையாமல் பார்த்துக் கொள்ளும்.
பாம்பு மற்றும் ஷூட்
நம்மூரில் ஆண்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த வகைகள் தலை முதல் கால் வரை மழையில் நனையாமல் பார்த்துக் கொள்ளும்.
கப்பல் ரெயின் கோட்
டூவீலரில் செல்லும் மக்களுக்காகவே பிரத்தியேகமாக கண்டுபிடிக்கப்பட்ட ரெயின் கோட் இது. ஸ்கூட்டியாகவே இருந்தாலும் கூட டிக்கியில் அதிகபட்சம் ஒரு கோட் மட்டுமே வைக்க முடியும். ஆனால், இந்த கப்பல் ரெயின் கோட், வண்டியில் இருவர் அமர்ந்தாலும் இருவரையும் கவர் செய்யும்.
யூ எஃப் ஓ
பார்ப்பதற்கு தலையுடன் சேர்த்து கட்டிய குடை போலவே மொத்த உடலையும் மறைத்தாற்போல் தோள்பட்டையில் இருக்கும். ஆனால், அதிக கன மழை அல்லது காற்றுடன் மழை பெய்யும்போது இது பெரிதாக உதவி செய்யாது. சின்ன மழை அல்லது கொஞ்ச நேரமே பெய்யும் மழைக்கு பயன்படுத்தலாம். இவை தவிர்த்து பூட்ஸ் பிளவுஸ் பேக் கவர், ஹேண்ட் பேக் கவர், மொபைல் ரெயின் கவர், லேப்டாப் ஷீல்டு கவர்... இப்படி பலவிதமான மழை ஆக்சஸரீஸ் உள்ளன.
ரெயின் கார்டு
சமீபத்திய வரவு. இதை பஸ்ஸில் கூட ஒரு விசிட்டிங் கார்டு போல் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இதை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். ஒரு சின்ன ஸ்லிப் போன்ற கவரில் மடித்து வைக்கப்பட்டிருக்கும் இந்த ரெயின் கார்டை மழை பெய்யும்பொழுது எடுத்து அணிந்து, பின் குப்பையில் எறிந்து விடவேண்டும்.
ஷாலினி நியூட்டன்
|