24 மணி நேரம் டிரம் வாசித்து சாதனை!
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா லாக்டவுன் தீவிரமாக இருந்த காலங்களில் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் டிரெண்டான ஒரு பெயர் ஒவைன் வின் இவான்ஸ். பிபிசி செய்தி சேனலில் வெதர்மேனாக இருக்கும் இவர் டிரம் வாசிப்பதில் கில்லாடி.
 மக்கள் வீட்டுக்குள் அடைந்து கிடந்தபோது அவர்களை உற்சாகப்படுத்த டிரம் வாசித்து வைரலானார். சமீபத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் பிபிசியின் தொண்டு நிறுவனத்துக்காக நிதி திரட்டுவதற்காக தொடர்ந்து 24 மணி நேரம் டிரம் வாசிக்கும் சவாலை ஏற்றுக்கொண்டார் ஒவைன். அத்தியாவசியமான தேவைகளுக்காக மட்டுமே சில நிமிடங்கள் இடைவெளிவிட்டு 24 மணி நேரம் தொடர்ந்து வாசித்து தனது சவாலில் வெற்றிகொண்டிருக்கிறார். இவருடன் சேர்ந்து ஐம்பதுக்கும் மேலான இசைக்கலைஞர்கள் இந்த சவாலில் ஒவைனுக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றனர். விஷயம் இதுவல்ல. ஒவைன் டிரம் வாசித்த நேரத்தில் 30 லட்சம் பவுண்ட் நிதி சேர்ந்திருக்கிறது. இந்திய மதிப்பில் 29 கோடி ரூபாய்!
த.சக்திவேல்
|