அதிர்ஷ்டம் இல்லையா?



ஐஸ்வர்யா ராயுடன் மோதல் வந்தபோது, ஐஸ் சாயலிலேயே இருந்த சினேகா உல்லல் என்ற நடிகையை அறிமுகம் செய்தார் சல்மான் கான். அடுத்ததாக காத்ரினாவுடன் மோதல் வந்தபோது சல்மான் கண்டுபிடித்த புதுமுகம் இந்த ஜரீன் கான். மும்பையில் அடித்தட்டுக் குடும்பத்தில் பிறந்த ஜரீன், குடும்பத்தைக் காப்பாற்ற மாடலிங் செய்துவந்தவர்.   ஒரு டைரக்டரிடம் சான்ஸ் கேட்கப் போன இடத்தில் சல்மான் ஷூட்டிங் நடக்க, சல்மானிடம் ஆட்டோகிராப் கேட்டார் ஜரீன். காத்ரினா& சல்மான் மோதல் முற்றியிருந்த நேரம் அது. ‘யார்ரா இந்தப் பொண்ணு... காத்ரினா மாதிரியே இருக்காளே’ என சல்மான் வியக்க, கூரையைப் பிய்த்துக்கொண்டு அதிர்ஷ்டம் கொட்டிய கதையாக, அடுத்த படத்திலேயே சல்மானுக்கு ஜோடியானார் ஜரீன். சில மாதங்களுக்கு முன் ரிலீஸான ‘வீர்’ என்ற அந்தப்படம் சரியாகப் போகவில்லை. சல்மானும் அதற்கடுத்து கண்டுகொள்ளவில்லை. இப்போது கைவசம் ஒரே ஒரு படம் மட்டுமே இருக்க, நல்ல பிரேக் வரும் என்றபடி நாட்களை நகர்த்துகிறார் ஜரீன்.  சாயல்களுக்கு அதிர்ஷ்டம் இருப்பதில்லையோ!      - ரெமோ