ராசி பலன்



மேஷம்

உங்களுக்கு சாதகமாக இருக்கற சூரியன், தன்னம்பிக்கையோடு செயல்பட்டு, தடைபட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிக்க வைப்பாருங்க. குடும்பத்தினர் மதிக்கற மாதிரி பேசுவீங்க; நடந்துப்பீங்க. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளோட இருந்த கருத்து மோதல் மறையுமுங்க. சலுகை விலையில் புது வாகனம் வாங்குவீங்க. அரசாங்க அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்குமுங்க. வியாபாரத்துல எதிர்பார்த்த லாபம் கிடைக்குமுங்க. உத்யோகத்துல மேலதிகாரி பாராட்டுவாருங்க. தினமும் எந்தச் செயலையும் மேற்கொள்ளும் முன்னால விநாயகரை வழிபடுங்க. அவர் அருள் அற்புதங்கள் புரியும்.


ரிஷபம்
 
ஆச்சரியப்படும்படி பணவரவு இருக்குமுங்க. குரு உங்களுக்கு சாதகமாக இருக்கறதுதாங்க காரணம். பிறர் பொறுப்பில் விடாமல், சில வேலைகளை நீங்களே செய்து முடிக்கறதால அனாவசிய செலவுகளும், டென்ஷனும் குறையும். கூடப் பிறந்தவங்களோட ஆதரவு உண்டுங்க. தாய்வழி உறவுக்காரங்களால இருந்து வந்த உபத்திரவம் நீங்கிடுமுங்க. தொண்டைப்புண், வாய் கசப்புன்னு உபாதை வரும். வியாபாரத்துல சரக்குகள் தேங்காது. உத்யோகத்துல திறமையை நிரூபிப்பீங்க. பிரதோஷ பூஜைக்கு வேப்பெண்ணெய்&இலுப்பெண்ணெய்&நெய் கலந்து முடிந்த அளவு  கொடுங்க. வாழ்க்கை பிரகாசிக்கும்.


மிதுனம்

பிரபலங்களின் அறிமுகமும் அவங்க உதவியால சில ஆதாயங்களும் கிடைக்க புதன் வலுவாக இருந்து அருள் புரிகிறாருங்க. குடும்பத்தினர் அனுசரணையாக இருப்பாங்க. பிள்ளைகளோட உடல்நிலை சீராகிடும். உடன்பிறந்தவங்களும் ஒத்துழைப்பாங்க. ஒற்றைத் தலைவலி, மூச்சுப்பிடிப்புன்னு கொஞ்சம் அவதிப் படுவீங்க. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயமுண்டுங்க. வியாபாரத்துல எதிர்பார்த்த லாபம் உண்டுங்க. உத்யோகத்துல புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். வியாழக்கிழமை விரதம் இருந்து மகான் தரிசனம் பண்ணுங்க; மங்கலம் சூழும்.


கடகம்

வெளிவட்டாரத்துல உங்க மதிப்பு கூடுமுங்க. சனி பகவானுக்கு நன்றி சொல்லுங்க; அவர் வலுவா இருக்கறதுதான் இதுக்குக் காரணம். பிள்ளைகள் பெருமை தேடித் தருவாங்க. கையில் காசு, பணம் தாராளமாகவே புரளும். மனைவியின் உடல்நிலை சீராகிடும். உடன்பிறந்தவங்களால மகிழ்ச்சியுண்டு. அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனையால சில ஆவணங்களை சரிபண்ணிப்பீங்க. மலச்சிக்கல், வாயுக்கோளாறுன்னு வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீங்க. உத்யோகத்துல பணிகளை விரைந்து முடிப்பீங்க. இஷ்டப்பட்ட பெண் தெய்வத்தை தியானம் பண்ணுங்க; கஷ்டங்கள் நெருங்காது.


சிம்மம்

உங்களுக்கு எதிரான, அல்லது உங்க உரிமைகளுக்காக மேற்கொண்ட வழக்குகளில் வெற்றி கிட்டுமுங்க. இதுக்கு செவ்வாய் சாதகமான நட்சத்திரங்கள்ல போறதுதாங்க காரணம். வரவேண்டிய கடன் தொகை கைக்கு வரும். சுபவிசேஷங்கள் தடைகள் விலகி நடந்தேறுமுங்க. பிள்ளைகளோட பிடிவாதம் தளரும். விடுபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீங்க. காய்ச்சல், கண் எரிச்சல்னு உபாதை வருமுங்க. வியாபாரத்துல பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்துல தொல்லை தந்த உயரதிகாரி இனி மனமுவந்து பாராட்டுவார். தட்சிணாமூர்த்தியை வழிபடுங்க; தடைகள் தவிடுபொடியாகும்.


கன்னி

ஏற்கனவே இழுபறியான அரசு விஷயங்கள், இப்ப குரு சாதகமான நிலையில இருக்கறதால, ஆதாயமாக முடிஞ்சுடுமுங்க. ரொம்ப நாளா பார்க்காதிருந்த பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவாங்க. குடும்பத்தினர் உங்க முயற்சிகளுக்கு ஆதரவு தருவாங்க. மகன் வேலை விஷயமாக முக்கியஸ்தர் ஒருவரை சந்திப்பீங்க; முயற்சியில் வெற்றியும் பெறுவீங்க. வயிற்றுவலி, சளித் தொந்தரவுன்னு கோளாறு வருமுங்க. வியாபாரத்துல புது கொள்முதல் செய்வீங்க. உத்யோகத்துல விசுவாசமா இருங்க; அடிக்கடி விடுப்பு எடுக்காதீங்க; வேலைச்சுமை அதிகமாகிடும். பெருமாளை வணங்குங்க; பெரிய திருப்பங்கள் நிகழும்.


துலாம்

பூர்வீக சொத்துப் பிரச்னைகள் நல்லமாதிரியாக முடிவடையுமுங்க. சூரியன் சாதகமாக இருந்து இந்த ஆதாயத்துக்கு வழிகாட்டறாருங்க. தடைபட்டிருந்த வேலைகளை விரைவாக முடிக்க முடியுமுங்க. கணவன்&மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய கடன் பிரச்னை அப்பப்ப மனசை வாட்டும்; கவலைப்படாதீங்க, சீக்கிரமா ஒரு தீர்வு கிடைக்கும். சகோதரர்கள் உதவுவாங்க. அடிக்கடி பழுதுபட்டு தொந்தரவு கொடுத்த வாகனத்தை மாற்றுவீங்க. வியாபாரத்துல தேங்கிய சரக்குகள் விற்றுத் தீருமுங்க. உத்யோகத்துல திறமையை வெளிப் படுத்த வாய்ப்பு வரும். துர்க்கையை வழிபடுங்க; துயரம் நெருங்காது.


விருச்சிகம்

ரொம்ப நாளாக எதிர்பார்த்திருந்த ஒரு வேலை இந்த வாரம் மனம் மகிழும் வகையில் முடியுமுங்க. குரு வலுவாக இருக்கறதுதாங்க இதுக்குக் காரணம். குடும்பத்துல நிம்மதி நிலவுமுங்க. கணவன்&மனைவிக்குள் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் இருக்குமுங்க. எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பிள்ளைகளோட விருப்பத்தை நிறைவேற்றி அவங்களை மகிழ்விப்பீங்க. கழுத்துவலி, மூட்டுவலின்னு கோளாறு வரும்.  சொந்த ஊரில் மதிப்பு கூடுமுங்க. வியாபாரத்துல வாடிக்கையாளர் அதிகரிப்பாங்க. உத்யோகத்துல பணிகளை விரைந்து முடிப்பீங்க. ஆஞ்சநேயரை வணங்குங்க. ஆவலெல்லாம் ஈடேறும்.


தனுசு

சூரியன் பலம்பெற்றிருக்காருங்க; அதனால வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும்; மதிப்பும் கூடும். மனசிலிருந்த குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்குமுங்க. 6ந் தேதி கொஞ்சம் அலைச்சல் இருக்கும். குடும்பத்தாரோட இருந்த கருத்து வேற்றுமைகள், அமைதியான பேச்சினால தீருமுங்க. பெரிய பதவியில் இருக்கறவங்களோட அறிமுகம் கிடைக்கும். குழந்தைப் பேறுக்காக ஏங்கியிருக்கறவங்க, சந்தோஷப்படும்படியான தகவல் வருமுங்க. வியாபாரத்துல பங்குதாரர்களின் தொல்லைகள் ஓயும். உத்யோகத்துல மேலதிகாரி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். இஷ்டபட்ட தெய்வத்தை தியானம் செய்ங்க; ஏற்றம்தான் இனி.


மகரம்

செவ்வாய் வலுவா இருக்கறதால மூத்த சகோதரர் சரியான சமயத்துல உதவிக்கு வருவாங்க; எதிர்பார்த்தபடியே, எதிர்பார்த்த இடத்துலேர்ந்து பணம் கைக்கு வருமுங்க. ஆடம்பரச் செலவுகளைக் குறைச்சுக்கோங்க. தொடர்பில்லாம இருந்த பழைய உறவுக்காரங்களை சந்தித்து மகிழ்வீங்க. 7, 8 தேதிகள்ல நிதானமா செயல்படணுமுங்க. இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். சுளுக்கு, மூட்டுவலின்னு சில்லரை உபாதை வருமுங்க. வழக்குகளில் வெற்றி உண்டுங்க. வியாபாரத்துல பற்று வரவு உயரும். உத்யோகத்துல சக ஊழியர்கள் ஆதரவா இருப்பாங்க. குலதெய்வத்தை மனசார தியானம் பண்ணுங்க; குறுக்கிடாது தடை எதுவும்.


கும்பம்

அலைபாய்ந்த மனசு அமைதியாகும். குரு சாதகமாக இருந்து இந்தப் பலனை உங்களுக்குத் தர்றாருங்க. குடும்பத்துல கலகலப்புக்குக் குறைவிருக்காதுங்க. கையில் காசு, பணம் நிறையும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்பட்டு, பெருமை தேடித் தருவாங்க. உடன்பிறந்தவங்களும் ஆதரவா இருப்பாங்க. மனைவிவழி உறவுக்காரங்களிடம் விட்டுக் கொடுத்து போயிடுங்க. 9, 10, 11ந் தேதி காலை 10 மணி வரை பொறுமையாக இருந்திடுங்க. வியாபாரத்துல பழைய வாடிக்கையாளர்கள் மறுபடி வருவாங்க. உத்யோகத்துல புது பொறுப்புகள் வந்து சேரும். சிவன் கோயில்ல விளக்கேற்றுங்க; புது ஒளி தோன்றும்.


மீனம்

சூரியன் சாதகமாக தொடர்வதால, தடைபட்ட வேலைகளை இந்த வாரத்துல விரைவாக முடிச்சுடுவீங்க. குடும்பத்துல சுபவிசேஷங்களும் கலகலப்பும் நிறையுமுங்க. பிள்ளைங்க உடல்நலம் சீராகிடும். மூத்த சகோதரரிடம் பண உதவியை எதிர்பார்க்கலாம். அரசாங்க அலுவல்கள்ல அனுகூலமான நிலை தெரியுதுங்க. கழுத்து வலி, நரம்பு சுளுக்குன்னு உபாதை வருமுங்க. 11&ந் தேதி காலை 10 மணி முதல் 12&ந் தேதி வரை முரண்டு பிடிக்காம விட்டுக்கொடுத்துப் போங்க. வியாபாரத்துல பங்குதாரர்களிடம் எச்சரிக்கையா இருங்க. உத்யோகத்துல மேலதிகாரியை விமர்சிக்காதீங்க. நவக்கிரக ஸ்தோத்திரம் சொல்லுங்க; நல்லதே நடக்கும்.