நிஜ சுல்தான் பராக்!



ரஜினி நடிக்கிற ‘சுல்தான் தி வாரியர்’ல திடீர் திருப்பமா முதல் பாதில மட்டுமே அனிமேஷனாவும் இரண்டாவது பாதியை நிஜ ரஜினியை வச்சும் எடுக்கப்போறாங்களாம். அதை டைரக்ட் பண்ணப்போறது கே.எஸ்.ரவிக்குமார். ஹை... நல்லா இருக்கே!

‘த்ரீ இடியட்ஸ்’ல விஜய், ஜீவா ஓகே ஆகிட மூணாவது கேரக்டருக்குதான் பெரும்பாடா இருக்குதாம். மாதவன் கேரக்டருக்குப் பல ஆர்ட்டிஸ்ட் மாறி இப்ப கார்த்திகிட்ட பேசிக்கிட்டிருக்காங்களாம். என்ன சொல்லப்போறார் கட்டம்போட்ட சட்டைக்காரர்?

கோலிவுட்காரர்களை வசப்படுத்த பாலிவுட்ல முன்பு மிதுன் சக்ரவர்த்தி இருந்தார். இப்ப அந்த இடத்தில ஜான் ஆப்ரஹாம். இவர் கூட நடிக்கப்போறதாவும் இவர் படத்தை டைரக்ட் பண்ணப்போறதாவும் சொல்ற கோலிவுட் கூட்டத்தில இப்ப மிஷ்கினும் சேர்ந்திருக்கார். பார்க்கலாம்!

இப்ப அடிக்கிற காத்து ‘மதராசப்பட்டினம்’ விஜய் பக்கம்தான். விக்ரம் படத்தை டைரக்ட் பண்ணவிருக்க அவர், அடுத்து அஜித் படத்தை டைரக்ட் பண்ணப்போறார். அதை அவரே புரட்யூஸ் பண்ணவும் போறாராம். கங்கிராட்ஸ்!

‘கோ’ படத்துக்கான பாடல்களை எடுக்க சீனா, நார்வேக்குப் பயணப்படவிருக்கு கே.வி.ஆனந்த் டீம். ஸோ, உலகம் சுற்றும் வாலிபனாகிறார் ஜீவா!

நானா படேகரை வச்சு ராம்கோபால் வர்மா எடுத்த ‘அப்தக் சப்பன்’ இந்திப்படத்தை தமிழ்ல ஷாஜி கைலாஷ் எடுக்கவிருக்கார். நானா ரோல்ல நடிக்கப்போறது ஆர்.கே. எல்லாம் இவர் செயல்தானா!

வன்மப்பாதைக்குப் போன ஹீரோ காதல் வயப்படற கதை யூஷுவலானது. அதை மாத்தி பல கொலைகளைச் செய்யற ஹீரோயின் ஒருவனைக் காதலிக்கிற புதுக்கதையை ‘வர்மம்’ படத்தில சொல்றாங்களாம். மாத்தி யோசிக்கிறாய்ங்களோ?

‘கற்றது களவு’ கிருஷ்ணா அடுத்து ரெண்டு படங்கள்ல ஹீரோவா நடிக்கிறார். ஏ.வெங்கடேஷ், ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ ராஜ்மோகன் டைரக்ட் பண்ற அந்தப்படங்களை ‘பட்டியல்’ சேகரே தயாரிக்கிறார்.

ஆந்திராவில சூட்டைக்கிளப்பற டாக்டர் ராஜசேகர் ‘மருதாணி’ மூலமா அன்பான அண்ணனா வர்றார். பாசமலரா மீரா ஜாஸ்மின் அவருக்குத் தங்கையானாலும் ஆர்த்தி அகர்வால் கூட இன்னொருபக்கம் டூயட் பாட மறக்கலை டாக்டர். அதானே!

                               - கோலிவுட்கோயிந்து