தத்துவம் மச்சி தத்துவம்





‘‘மன்னா! தாங்கள் மகாராணியின் ஆடைகளைத் துவைக்கின்ற ரகசியம் வெளியே தெரிந்து விட்டது...’’
‘‘அதனால் என்ன அமைச்சரே..?’’
‘‘தங்களை வைத்து விளம்பரப் படம் எடுக்க சோப்புக் கம்பெனிக்காரர்கள் வந்திருக்கிறார்கள்..!’’
- சரவணன்,கொளக்குடி.

‘‘மந்திரியாரே... நம் நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவுவதாக புரளியைக் கிளப்பி விடுங்கள்...’’
‘‘ஏன் மன்னா..?’’
‘‘எதிரி மன்னன் அதற்காவது பயப்படுகிறானா என்று பார்ப்போம்..!’’
- அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.

‘ரெகுலர் கோர்ஸ்’ல சேர்ந்து படிக்கலாம்; ‘பார்ட் டைம் கோர்ஸ்’ல சேர்ந்து படிக்கலாம்; ‘கரஸ்பான்டென்ஸ் கோர்ஸ்’ல கூட சேர்ந்து படிக்கலாம். ஆனா, ‘ரேஸ்கோர்ஸ்’ல சேர்ந்து படிக்க முடியுமா?
- லாவண்யா, திருச்சி.

என்னதான் நீங்க வளர்க்கிறது ‘நாட்டுக்கோழி’யா இருந்தாலும், அதுவும் ‘கொக்கரக்கோ’ன்னுதான் கூவும்... அது மட்டும் என்ன ‘ஜெய் ஹிந்த்’னா கூவப்போகுது?
- சேவல்களுக்குள் சண்டை இழுத்துவிடுவோர் சங்கம்
- ஏ.ஸ்ரீதர்,பொன்மேனிபுதூர்.

‘‘கஷ்டப்பட்டு மேல வந்திருக்கேன்னு சொல்றாரே நம்ம தலைவர்... சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்பட்டாரா?’’
‘‘ம்ஹும்... லிஃப்ட் வேலை செய்யாததால, மூச்சு வாங்க அஞ்சு மாடி ஏறி வந்ததைச் சொல்றார்!’’
- கே.ஆனந்தன், பி.பள்ளிப்பட்டி.


‘‘பொண்ணு பார்த்துட்டுப் போன மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சரியான அல்பம் போலிருக்கு...’’
‘‘ஏன்?’’
‘‘பொண்ணு பிடிச்சிருந்தா வீட்டுக்குப் போய் மிஸ்டு கால் கொடுக்கறேன்னு சொல்றாங்க!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘தலைவருக்கு இவ்வளவு பொன்னாடைகள் வந்து குவியுதே... என்ன விஷயம்?’’
‘‘பொன்னாடை போர்த்தறவங்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து கலர் டிவி, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் எல்லாம் தரப்போறாராம்..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.