கரன்ட் கபாலி





‘‘அரசாங்கம் ஏவுகணை வீசி டெஸ்ட் பண்ணா, பெருமைப்படறீங்க! நான் பணக்கட்டை வீசி எறிஞ்சா மட்டும் திட்டறீங்களே?’’

‘‘தொந்தரவு பண்ணாதீங்க ஏட்டய்யா! நைஜீரியாவுல இருக்கற என் ஃபேஸ்புக் தோஸ்துகிட்ட ‘சாட்’ பண்ணிட்டிருக்கேன். ஹைடெக்கா லவுட்டுற டெக்னிக் வந்திருக்காம். சொல்லித் தர்றான்...’’

‘‘நம்ம ஸ்டேஷனோட தோட்டத்து ஏரியாவை கபாலிதான் யூஸ் பண்ணிட்டிருக்கான் சார்! வீச்சரிவாள், உருட்டுக்கட்டைன்னு வாடகைக்கு விடறான். நமக்கும் 30 பர்சன்ட் கமிஷன் குடுத்துடறான்!’’

‘‘இல்ல சார்! டிரெயின்ல ஏ.சி. டிக்கெட் ரேட் ஏறியிருக்காம். நம்மள மாதிரி ஏழை, பாழைங்க எப்படிப் போறது? அதான் பேசாம ஃபிளைட்லயே ஊருக்குப் போயிடலாம்னு பார்க்கறேன்...’’

‘‘போங்க ஏட்டய்யா! இன்னிக்கு தங்கம் விலை சரிவா இருக்கு... தொழிலுக்குப் போனா லாபமில்லை! ரேட் நல்லா ஏறினபிறகு போயிக்கலாம்!’’

‘‘சாரி சார்... தப்பா எடுத்துக்காதீங்க! பேலன்ஸ் செக் பண்ணுன்னு நீங்க சொன்னதாலதான் தள்ளி விட்டேன். என்னோட பேங்க் பேலன்ஸ்னு தெளிவா சொல்லக்கூடாதா?’’