நியூஸ் வே





விஷ்ணுவர்த்தன் படம் முடிந்ததும் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படம் தான் அஜித்தின் அடுத்த கமிட்மென்ட். இதில் அஜித்தின் தீவிர விசிறி சிம்புவும் நடிக்கப்போவதாக வெளியான செய்திகள் ‘கப்சா’ என மறுத்துள்ளது தயாரிப்பு வட்டாரம். ‘‘ஹீரோயினாக தீபிகாவை கேட்டுருக்காங்க... அசினிடம் பேசியிருக்காங்க...’’ என்ற செய்தியிலும் எள்ளளவும் உண்மையில்லையாம். அனுஷ்கா நடிக்க 99.9 சதவீதம் வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.

ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் அட்லி. இவர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்குகிறார். ஹீரோயினாக நடிக்க நயன்தாராவைக் கேட்டபோது, ‘‘யார் ஹீரோ?’’ என்று கேட்டிருக்கிறார் நயன். ஜெய் என்று இயக்குனர் சொல்ல ஆரம்பித்ததும், தயங்கியிருக்கிறார் நயன். ‘‘படத்தில் ஆர்யாவும் நடிக்கிறார். இது முக்கோணக் காதல் கதை’’ என்று இயக்குனர் முழுசாக சொல்லி முடித்த பிறகே ஓகே சொன்னாராம் நயன்.