சுட்டகதை சுடாதநீதி





விமானம் புறப்பட்டு அரை மணி நேரம் ஆகியிருந்தது. உயர வானில் பறந்து கொண்டிருந்தது. இன்னும் எட்டு மணி நேரம் பயணிக்க வேண்டும். இடையில் எங்கும் விமானம் நிற்க வாய்ப்பில்லை. டேக் ஆஃப் பரபரப்பு முடிந்து ரிலாக்ஸ் ஆகியிருந்த பயணிகள், எப்போது சாப்பாடு வரும் என எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

அப்போது விமானப் பணிப்பெண் ஒருவர் டென்ஷனாக ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்தார். ‘‘பயணிகள் மன்னிக்கவும்! ஒரு பெரிய தவறு நடந்துவிட்டது. நம் விமானத்தில் நூற்றைம்பது பயணிகள் இருக்கிறார்கள். ஆனால் ஏதோ தவறு நடந்ததில், வெறும் 70 சாப்பாட்டு பார்சல்கள்தான் விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளன. சிரமத்துக்கு வருந்துகிறோம்...’’ என்று அந்த அறிவிப்பு நின்றதும், விமானம் முழுக்க சலசலப்பு. பலரும் கோபத்தில் இருக்கையை விட்டு எழுந்து கத்தினர்.

‘‘தயவுசெய்து பொறுமை காக்கவும்! நமது விமான நிறுவனம் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒரு சலுகை வழங்கும். அதாவது, யார் யார் எல்லாம் தங்களுக்கு சாப்பாடு தேவையில்லை என அடுத்தவர்களுக்கு விட்டுத் தருகிறார்களோ... அவர்களுக்கு இந்த எட்டு மணி நேரமும் அவர்கள் விரும்பும் மதுபானம் தரப்படும். எந்த லிமிட்டும் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம்’’ என்று மீண்டும் அறிவிப்பு வந்ததும், விமானத்தில் கடும் நிசப்தம்!

பரிமாறல்களும் பாட்டில் சத்தங்களும் சூழ்நிலையை மாற்றின. ஒரு மணி நேரம் கழித்து அந்த பணிப்பெண் மீண்டும் ஒரு அறிவிப்பு செய்தார். ‘‘சாப்பாட்டைவிட பாட்டில்கள் வேகமாக காலியாகின்றன. இப்போதும் யாராவது மனம் மாறினால், நாங்கள் பரிமாறத் தயாராக இருக்கிறோம். இன்னும் 30 சாப்பாட்டு பார்சல்கள் அப்படியே இருக்கின்றன. தயவுசெய்து யாராவது குடிப்பதை நிறுத்திவிட்டு சாப்பிடுங்கள்!’’
எது சலுகை என்பதில் குழப்பம் கூடாது!