தத்துவம் மச்சி தத்துவம்





‘‘தலைவரோட தற்பெருமைக்கு அளவில்லாமப் போச்சா... ஏன்?’’
‘‘வரலாற்றிலேயே மிகக் குறைந்த மணித்துளிகள் அமைச்சராக இருந்தது நான்தான்ங்கறாரே..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

என்னதான் கரண்டி விற்பவர் கரண்டி உடையாதுன்னு கேரண்டி கொடுத்தாலும், அதைக் கரண்டின்னுதான் சொல்லணும்; கேரண்டின்னு சொல்ல முடியாது.
- வாரண்டி இருக்கும் பொருளை மட்டும் வாங்குவோர் சங்கம்
- சக்தி இளங்கோ, தஞ்சாவூர்.

எவ்வளவு பெரிய ஆக்சிடென்ட் நடந்தாலும், அதை வி‘பத்து’ன்னுதான் சொல்லுவாங்களே தவிர, வி‘நூறு’, வி‘லட்சம்’, வி‘கோடி’ன்னு எல்லாம் சொல்ல மாட்டாங்க!
- தத்துவக் காரில் ஈ.சி.ஆர் ரோட்டில் டாப் கியரில் பறப்போர் சங்கம்
- டி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி.

‘‘தலைவர் தன் வாய்ல இருந்து கட்சி உறுப்பினர் கார்டு எடுத்தாராமே... எப்படி?’’
‘‘ஜெயில்ல இருந்தப்போ, யாரோ ஒரு சாமியார் கத்துக் குடுத்திருக்கார்..!’’
- அம்பை தேவா, சென்னை- 116.

‘‘கம்ப்யூட்டர் கிளாஸ்ல நம்ம தலைவர் மானத்தை வாங்கிட்டாரா... எப்படி?’’
‘‘யூ டியூப்பிற்கு எப்படி பஞ்சர் போடறதுன்னு கேட்டுத் தொலைச்சுட்டார்..!’’
- நா.கி.பிரசாத், கோவை.

‘‘மாப்பிள்ளை பசையுள்ள இடம்னு சொல்லி ஏமாத்திட்டாங்க...’’
‘‘ஏன்... அவர் என்ன பண்றாரு?’’
‘‘சுவத்திலே போஸ்டர் ஒட்டற வேலை பார்க்கறாரு!’’
- குரு.சுப்ரமணியன், சென்னை-33.

‘‘அவர் ரொம்ப ஸ்ட்ரிக்டான டாக்டர்னு எதை வச்சு சொல்றே..?’’
‘‘பிறந்ததுக்கு அப்புறம்கூட ‘குழந்தை ஆணா, பெண்ணா’ன்னு சொல்ல மாட்டேங்கறார்..!’’
- சி.சாமிநாதன், கோவை.