தீபாவளி ஜோக்ஸ்




‘‘தலைவரை ஏன் கைது பண்றாங்க..?’’
‘‘தீபாவளிக்கு வெடிக்க மனித வெடிகுண்டு வேணும்னு விளம்பரம் பண்ணியிருந்தாராம்..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘இப்பத்தானே ரெய்டு வந்துட்டுப் போனீங்க... மறுபடி எதுக்கு வந்திருக்கீங்க?’’
‘‘இது‘தீபாவளி இனாம்’க்கான ஸ்பெஷல் ரெய்டு சார்..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘தலைவர் செய்யறது கொஞ்சமும் சரியில்லை...’’
‘‘அப்படி என்ன செஞ்சார்..?’’
‘‘பட்டாசு விலையேற்றத்தை கண்டிச்சு, பட்டாசுக்கடைகளுக்குள் வேட்டு போடும் போராட்டத்தை ஆரம்பிக்கப் போறாராம்..!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

‘‘ஆனாலும் நம்ம கபாலிக்கு ரொம்ப நல்ல மனசுய்யா...’’
‘‘எப்படிச் சொல்றீங்க ஏட்டய்யா..?’’
‘‘திருடப் போற ஒவ்வொரு வீட்லயும், தீபாவளி ஸ்வீட் கொடுத்துட்டுத்தான் திருடவே ஆரம்பிக்கறான்..!’’
- பா.து.பிரகாஷ், தஞ்சாவூர்.

‘‘என்ன மாமா இது... பாத்ரூம்ல ரெண்டு ஷவர் இருக்கு?’’
‘‘தலை தீபாவளி ஸ்பெஷல் மாப்ள! ஒண்ணுல எண்ணெய் வரும்; இன்னொண்ணுல தண்ணி வரும்...’’
- அ.ரியாஸ், சேலம்.

‘‘சென்னையில இருக்கற உங்க மாப்பிள்ளை
தீபாவளிக்கு வரலையா...
ஏன்?’’
‘‘இங்கே தினமும் 20 மணி நேரம் பவர்கட்னு கிளப்பிவிட்டேன்... அதான்!’’
- பா.து.பிரகாஷ், தஞ்சாவூர்.

‘‘தலைவர் பண்ற ரவுசு தாங்கல...’’
‘‘என்ன செய்தார்..?’’
‘‘மகளிரணித் தலைவி வீட்டுல பட்டாசு வெடிக்க கூலிப்படை ஏற்பாடு பண்ணியிருக்கார்..!’’
- அ.ரியாஸ், சேலம்.