சர்க்கரை போட்டுக்கங்க!





ஜில்லிட வைக்கும் டூ-இன்-ஒன் ஐஸ்க்ரீம் போல தீபாவளிக்கு இரட்டை சிறப்பிதழ் தந்து எங்களை திக்குமுக்காடச் செய்து விட்டீர்கள்... நன்றி!
- ரேவதி ப்ரியன், ஈரோடு.

நெல்லை, வரதராஜபுரம் கிராமம் காலியான சோகம் மனதைப் பிசைந்தது. மீண்டும் பழைய கிராமத்தை உருவாக்கியே தீருவோம் என்று அவர்களுக்கு வந்திருக்கும் வேகம், ‘முன்னாள் கிராமவாசிகள்’ எல்லோருக்கும் வந்தால் நன்றாக இருக்கும்!
- டி.டி.சாமி, உச்சனவலசு.

அவமானங்களையும் சரியான வார்த்தைகள் மூலம் அழகாக மாற்றியமைக்கலாம் என்பதை ‘சுட்ட கதை சுடாத நீதி’ எளிமையாகச் சொல்லிவிட்டது.
- வரலட்சுமி முத்துசாமி, கிழக்கு முகப்பேர்.

என்ன விஜய்... இந்தியில் நடிக்கப்போறீங்களா? வாயில் கொஞ்சம் சர்க்கரை அள்ளிப் போட்டுக்கங்க. கமல், ரஜினி போல நீங்களும் இந்தியாவை ஒரு கலக்கு கலக்குங்க!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘ஓப்பன் டாக்’கில் இந்தி நடிகை பிபாஷா பாசு, ‘நிலையான ஒரு உறவுக்காக ஏங்கிக்கிட்டு இருக்கேன்’ என்று சொல்லியிருக்கும் வார்த்தைகளிலேயே பல ‘நிலையில்லாத உறவுகள்’ நிழலாடுகின்றன. சீக்கிரம் நிம்மதியான ஒரு ‘நிலை’யை அவர் எட்ட, ஆல் தி பெஸ்ட்!
- கே.ஸ்ரீதரன், வந்தவாசி

‘வடகிழக்கு வசந்தம்’ படிக்கும்போதே மலைகளின் பேரரசியான மிசோரம் மாநிலம் சென்று வந்த
எஃபெக்ட் கிடைத்தது. நன்றி!
- சு.கம்பதாசன், சிவகங்கை.

தீபாவளி கொடுமைகளிலிருந்து தப்பிக்க டாப் பத்து வழிகள் படு சூப்பர். பர்ச்சேஸில் மனைவியருக்கு பேக் தூக்கி ‘பேக்கு’ மாதிரி அலையப் போகும் கணவன்களுக்கு இது ஒரு டைமிங் அலர்ட்!
- எச்.வி.தனபால். சிவகங்கை.

‘சோரியாசிஸ்’ நோயைச் சொல்லக்கூட கூச்சப்படுபவர்களுக்கு தனக்குத்தானே செய்துகொள்ளக் கூடிய அக்கு மருத்துவக் குறிப்புகளை டாக்டர் எம்.என்.சங்கர் வழங்கிய விதம், அருமை!
- ஜி.ஆர்.வெண்ணிலா கண்ணன், போளூர்.

‘ச்சீய்’ பக்கங்களில் இந்த வாரம் ‘போர்னோகிராஃபி’ வரலாற்றைத் துவைத்துக் காயப்போட்டு விட்டீர்கள். பேசாப் பொருளை இத்தனை விளக்கமாகப் பேசும் உங்கள் முயற்சி, வாழ்க, வளர்க!
- எச்.வி.சுந்தரம், புதுச்சேரி.