பந்தயப் புறா ஃபீவர்!

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, ரேக்ளா ரேஸ் என்று பண்டிகை காலங்கள் போட்டிகளால் களைகட்டும். குமரி மாவட்டத்தில் வெயிலும் இல்லாத மழையும் இல்லாத தென்மேற்கு பருவக்காற்று காலம்தான் விசேஷம். காரணம், புறா பந்தயம்! இந்த சீசன் வந்துவிட்டால் போதும்... இளைஞர்கள் தங்கள் புறாக்களை தயார் செய்து கொண்டு, நாகர்கோவிலிலிருந்து விஜயவாடா, கடப்பா, ஓங்கோல் என்று ஆந்திர நகரங்களுக்கு ரயிலேறி விடுவார்கள். அங்கு புறாவை பறக்கவிட்டுவிட்டு வந்தால், மறுநாள் இவர்கள் வருவதற்குள் புறா வீட்டுக்கு வந்திருக்கும். எத்தனை மணி நேரத்திற்குள் வந்தது என்பதுதான் போட்டி. பணம், கோப்பை என பரிசுகள் குவியும்!

‘‘பழங்காலத்துல இருந்து நடக்குற விளையாட்டு சார் இது’’ என்று ஆரம்பித்தார் பகவத் சிங். பக்குவமாக புறாக்களை வளர்த்து, போட்டிக்குத் தயார் செய்வதில் இவர் ஒரு ‘பேட்டைக்காரன்’ என்கிறது புறாப் போட்டி வட்டாரம்.

‘‘புறாவுல ஹோமர், டிப்ளேர், மேய்ச்சல், ஃபேஷன்னு 4 வகை இருக்குங்க. ஹோமர், டிப்ளர் ரெண்டையும்தான் போட்டிகளுக்காக வளர்க்க முடியும். ஹோமர் ரொம்ப தூரம் பறக்கும். மணிக்கு 155 கி.மீ. வேகம் இதுக்கு உண்டு. அந்தக் காலத்துல மன்னர்கள் தூது விட்டதெல்லாம் இந்தப் புறாக்களைத்தான். வேட்டைக்குப் போற மன்னருங்க புறாவையும் கூட கொண்டு போவாங்க. நடுக்காட்டுல வேட்டையில இருக்கும்போது ஏதாவது உதவி தேவைப்பட்டா, அதோட கால்ல ஒரு ஓலை கட்டிப் பறக்கவிடுவாராம். அது நேரா அரண்மனைக்குப் போயிடும். அதே டெக்னாலஜிதான் இன்னைக்கு வரைக்கும் போட்டிகள்ல தொடருது.

பந்தயப் புறாக்களை குஞ்சு பொரிஞ்சதுல இருந்து எஜமானருங்க மட்டுமே இரை போட்டு வளர்க்கணும். நாய்கள் போல புறாக்களும் நன்றியோட இருக்கும். நம்ம வாய்க்குள்ள இரையை வச்சுக்கிட்டு அதோட வாயில ஊட்டி விட்டுப் பழக்கிட்டீங்கன்னு வைங்க... அந்தப் புறாக்கள் ஒரு நாள் கூட நாம இல்லாம சாப்பிடாது. எந்த ஊருல கொண்டுபோய் விட்டுட்டு வந்தாலும், சரியா வீட்டைத் தேடி வந்துடும்’’ என்கிற பகவத் சிங், புறாக்களுக்குத் தரப்படும் பறத்தல் பயிற்சியைப் பற்றியும் விவரித்தார்.

‘‘குஞ்சு பருவத்துல இருந்தே பயிற்சி தொடங்கிடும். வீட்டு மாடியில விட்டுட்டு வந்தா, கீழ தன்னோட கூட்டுக்கு வந்து சேரணும். இதுதான் முதல் கட்டம். தினசரி ஒரு மணி நேரம் பயிற்சி. அப்புறம் 2 கிலோமீட்டர், 3 கிலோமீட்டர், 5, 10, 100 கிலோமீட்டர்னு தூரத்தை அதிகமாக்கிட்டே போகணும். எடுத்த எடுப்புல ஆந்திராவுல கொண்டு போய் விட்டுற முடியாது. சரியா பயிற்சி கொடுத்துட்டா, ஒரு புறா 975 கி.மீ தூரத்தைக் கூட கடந்து வரும். குஞ்சு பொரிச்ச மூணு நாள்ல இருந்து புறாவோட கால்ல ஒரு வளையம் போடுவோம். அது எந்த ஏரியா புறா, யாரு ஓனர்ங்கிற தகவல் எல்லாம் அதுல இருக்கும். திரும்பி வர்ற புறா நம்மளுதுங்கறதுக்கு அதுதான் அடையாளம்’’ என்றவர், டிப்ளேர் என்ற இன்னொரு வகைப் புறாக்களுக்குத் தாவினார்...

‘‘ஹோமர் அதிக தூரம் பறக்கும்னா, டிப்ளேர் அதிக நேரம் பறக்கும். இந்தப் புறாவுக்குப் பந்தயம் நேரக் கணக்குலதான். போட்டிக்குத் தயாராகுற புறாவோட வாலுல, வளக்குறவங்க பேரை ரப்பர் ஸ்டாம்ப் வைப்பாங்க. அடையாளத்துக்காக அதோட இறக்கையில ஒரு வித சாயமும் பூசியிருப்பாங்க. உயரத்துல பறந்துக்கிட்டிருக்குற புறாக்களை ‘ஜட்ஜ்’ அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை நோட் பண்ணுவார். அந்த ‘டெஸ்ட் மேட்ச்’ல 6 முதல் 7 மணி நேரமாவது அது பறந்துக்கிட்டே இருக்கணும். அதுக்குள்ள கூட்டுக்கு வந்துட்டா, அது போட்டிக்கே தகுதி இல்லன்னு அர்த்தம். கனடாவுல ஒரு புறா 23 மணி நேரம் தொடர்ச்சியா பறந்ததுதான் இந்த வகையில சாதனையா இருந்துச்சு. சமீபத்துல ஒரு போட்டியில எங்ககிட்ட உள்ள புறா 26.5 மணி நேரம் தொடர்ந்து பறந்திருக்கு’’ என்றவர், பந்தயப் புறாக்களுக்கு உள்ள ஆபத்துகளைப் பற்றியும் பேசினார்...

‘‘பொதுவா இதுகளுக்கு எமனா இருக்கறது ‘பெரிகிரைன்’ங்கற வகை பருந்துதான். உயரமான பில்டிங், செல்போன் கோபுரம் எதுலயாவது உக்கார்ந்து பார்த்துக்கிட்டே இருக்கும். ஹோமர் பந்தயப் புறா வந்தா போதும்... துரத்திப் போய் கொத்தி கீறிடும். புறாக்களுக்கு உயிர் பிழைக்கிறதே பெரிய விஷயம். இதுதவிர ஆந்தை, கூவைன்னு சில பெரிய பறவைகளாலயும் ஆபத்து உண்டு. இதுகளால அவதிப்பட்டு, 6 மாசம் கழிச்சு திரும்பி வர்ற பந்தய புறாக்கள் கூட உண்டு. செத்துப் போனதா நினைச்ச தமிழ் சினிமா ஹீரோ திரும்பி வர்ற மாதிரி அப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கும். இப்படி லேட்டா வர்ற புறாக்கள், கூடவே ஒரு ஜோடியை இழுத்துக்கிட்டு வர்றதும் உண்டு.

ரொம்ப தூரம் போட்டியில பறந்து வர்ற புறாக்கள் பருந்துகிட்ட கீறல்பட்டு காயத்தோட கூட்டுக்கு வரும்போது பரிதாபமா இருக்கும். அதுக்கப்புறம் அதுக்கு மருந்து பத்தியமெல்லாம் கொடுத்து உடம்பைத் தேத்துவோம். புறா வளக்குறவங்களுக்கு இந்த மருந்துகளைப் பத்தியும் தெரிஞ்சிருக்கணும். 6 மாசத்துக்கு ஒரு தடவை குடற்புழு நீக்கத்துக்கு மருந்தும், கால்சியம் மருந்தும் ரெகுலரா கொடுக்கணும். உடம்புல பூச்சி பிடிக்காம இருக்க மருந்துக் குளியலும் உண்டு’’ என்றார் பகவத் சிங்.

புறாக்களை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்கிற இவர்கள், செருப்புக் காலோடு கூட புறாக்களை நெருங்குவதில்லை. ‘‘ஒரு ஃபீல்டுன்னு இறங்கிட்டா... அதைக் கருத்தா செய்யணுமில்ல’’ என்று ஒரே குரலில் சொல்கிறார்கள் இந்தப் ‘புறா’தனத் தமிழர்கள்!
உலகத்துல உள்ள எல்லா ஃபீல்டுலயும் இறங்குங்க மக்கா!
- எம்.ராஜகுமார்
படங்கள்: ஆர்.மணிகண்டன்

லட்ச ரூபாய் புறா!

சாதாரணமாக ஒரு புறாவின் விலை ரூ.600. குஞ்சு புறாக்கள் ரூ.2000 முதல் ரூ.2500 வரை விற்பனையாகிறது. போட்டிகளில் வெற்றி பெற்ற சான்றிதழ்களை வைத்திருந்தால் 1 லட்ச ரூபாய் வரை விலைகொடுத்து வாங்குவோர் உண்டு. ஹோமர் வகையில் ஆண் புறாக்கள் அதிக தூரம் பறக்கும் தன்மை உடையவை. டிப்ளேர் வகையில் பெண் புறாக்களே அதிக நேரம் பறக்கும். பந்தயப் புறாக்களை இனப்பெருக்கத்திற்காக இணைய விடுவதில்லை. 4 வயது வரை புறாக்களுக்கு பந்தயத்திற்கான சக்தி இருக்கும். அதன் பின்னரே இனப்பெருக்கத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. பெரும்பாலும் கனடா, பெல்ஜியம், சவூதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்துதான் புறாக்கள் கொண்டு வரப்படுகின்றன. முட்டைகளைக் கொண்டுவந்து இங்கு பொரிக்க வைப்பதும் உண்டு. அப்படி உருவாகும் புறாக்களை இந்தியப் புறாக்களுடன் இணையவிட்டு புதிய ரகங்களும் தயாரிக்கப்படுகின்றன. இந்த வகை புறாக்கள்தான் போட்டிகளில் அதிக திறமை வாய்ந்ததாக இருக்கின்றனவாம்.