ஜோக்ஸ் 1





‘‘எதுக்கு மேடம் வீட்ல இருந்து பீரோவை எடுத்துக்கிட்டு ஜவுளிக்கடைக்கு வந்திருக்கீங்க..?’’
‘‘என்கிட்ட இல்லாத கலரா பார்த்து எடுக்கணும்... அதான்!’’
- அ.ரியாஸ், சேலம்.

‘‘என்ன இது... தீபாவளிக்கு அனைத்துக் கட்சி மகளிரணித் தலைவிகளை மட்டும் தலைவர் கூப்பிட்டிருக்காரு..?’’
‘‘சமத்துவ தீபாவளி கொண்டாடப் போறாராம்..!’’
- பா.து.பிரகாஷ், தஞ்சாவூர்.

‘‘பாம்பு மாத்திரை பாக்கெட்டுக்குள்ள ஏதோ பிரிஸ்கிரிப்ஷன் மாதிரி இருக்குதே..?’’
‘‘சாப்பாட்டுக்கு முன்னாடி பத்த வைக்க வேண்டிய மாத்திரை எது, சாப்பிட்ட பிறகு பத்த வைக்க வேண்டியது எதுன்னு அதுல எழுதியிருக்கும் சார்!’’
- சி.பி.செந்தில்குமார், சென்னிமலை.

‘‘தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்குப் போன நம்ம தலைவர், ஏன் கோவிச்சுக்கிட்டு வந்துட்டார்..?’’
‘‘அவரை வரவேற்று ஒரு போஸ்டர் கூட ஒட்டலையாம்..!’’
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

‘‘பயப்படாதீங்க... லட்டுதான்! ஒரு சேஞ்சுக்கு இப்படி திரி வச்சு பாம் மாதிரி பண்ணியிருக்கேன்...’’
- அ.ரியாஸ், சேலம்.

‘‘இந்த வருஷம் நம்ம தலைவர் பேர்ல ஒரு சரவெடி அறிமுகம் ஆகியிருக்காமே... அதுல என்ன விசேஷம்?’’
‘‘வெடிச்சு சிதறுற பேப்பர்கள்ல தலைவரோட ‘குற்றப்பத்திரிகை’யை படிக்கலாமாம்..!’’
- மதுரை முருகேசன், தஞ்சாவூர்.

‘‘ஏட்டய்யா என்ன குஷியா இருக்கார்..?’’
‘‘கபாலி வழக்கமா தர்ற மாச மாமூலோட, தீபாவளி போனஸ் மாமூலும் கொடுத்தானாம்..!’’
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.