ஜோக்ஸ் 2





‘‘புலவர் மீது மன்னர் ஏக கடுப்பில் இருக்கிறாராமே... என்ன காரணம்?’’
‘‘மன்னர் பட்டாசுக்கு நெருப்பு வைக்கப் போகும்போது, ‘ஒரு ஊசியே ஒரு ஊசி வெடிக்கு நெருப்பு வைக்கிறதே... அடடே, ஆச்சர்யக்குறி!’ என்று சொன்னாராம்...’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

‘‘வீட்டுக்குப் போற வழியில அப்படியே கோயிலுக்குப் போயிட்டு போயிடுவோம்ங்க...
‘‘ஏன் மாலா..?’’
‘‘சேலை நல்லபடியா செலக்ட் ஆனா, உங்க தலைல 10 தேங்கா உடைக்கிறதா வேண்டியிருக்கேன்..!’’
- அ.ரியாஸ், சேலம்.

‘‘அந்தக் கள்ள நோட்டு கும்பல் எப்படி போலீஸ்ல மாட்டிக்கிச்சி..?’’
‘‘நோட்டுல ‘தீபாவளி வாழ்த்துக்கள்’னு சேர்த்து அடிச்சிருக்காங்க..!’’
- அ.ரியாஸ், சேலம்.

‘‘பெண்களைக் கவர்ற மாதிரி கூட்டத்துல பேசுங்கன்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பாப் போச்சா..?’’
‘‘ஆமா... தீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்காரு!’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

என்னதான் லேட்டஸ்ட் டெக்னாலஜி பட்டாசா இருந்தாலும், அதுலயும் ‘திரி’தான் இருக்கும். ஃபோர், ஃபைவ் எல்லாம் இருக்காது!
- திரி கிள்ளுவதற்கே கவுன்ட் டவுன் சொல்வோர் சங்கம்

என்னதான் பட்டாசு ஆலை நிலமா இருந்தாலும், அதுக்கும் ‘பட்டா’தான் வாங்க முடியும்; ‘பட்டாசு’ வாங்க முடியாது.
- இலவச பட்டாவுக்காக காத்திருப்போர்
சங்கம்- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

‘‘ஏன் தீபாவளி முடிஞ்சு ஒரு வாரம் ஆனப்புறம் ஜோரா பட்டாசு வெடிக்கறீங்க..?’’
‘‘என் மாப்பிள்ளை ஊருக்குக் கிளம்பிட்டார்..!’’
- அ.ரியாஸ், சேலம்.