ஜோக்ஸ் 3





‘‘உங்க கடையில வாங்கின பட்டாசுகளை பத்த வச்சா, எல்லாம் தனித்தனியா போய் வெடிக்குதே... ஏன்?’’
‘‘அது கூட்டணி பட்டாசுங்க...’’
- தேனி முருகேசன், தேனி.

‘‘தலைவருக்கு போதை ஏறிப் போச்சு..!’’
‘‘எதை வச்சு சொல்றே..?’’
‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு ‘விலையில்லா’ பட்டாசு    கொடுப்போம்ங்கறாரே..!’’
- உ.குணசீலபாண்டியன், ராஜபாளையம்.

தீபாவளி செலவு தாங்காம மொட்டை அடிச்சுக்கறவர், தன் தலைக்கு ‘கேப்’ வச்சுக்கலாம்; ‘கேப் பட்டாசை’ வச்சுக்க முடியுமா?
- வெடிக்கிற ‘கேப்’பில் ‘எஸ்கேப்’ ஆவோர் சங்கம்
- உ.குணசீலபாண்டியன், ராஜபாளையம்.

‘‘தலைவர் ஒவ்வொரு வருஷமும் தீபாவளியை ஜெயிலுக்குப் போய் கைதிகளுக்கு ஸ்வீட் எல்லாம் கொடுத்து கொண்டாடுவார்...’’
‘‘இந்த வருஷம்..?’’
‘‘கைதியாவே ஜெயில்ல இருந்து கொண்டாடறார்!’’
- கே.ஆனந்தன், பி.பள்ளிப்பட்டி.

‘‘தீபாவளிக்கு முதல் நாளே ஓவரா குடிக்காதீங்கன்னா தலைவர் கேட்டாரா..?’’
‘‘ஏன்... இப்ப என்னாச்சு..?’’
‘‘போதையில ஒரு வாரமா தூங்கிக்கிட்டு இருந்தவர், இப்ப எழுந்து ‘நாளைக்குத்தானே தீபாவளி’ன்னு கேக்கறார்..!’’
- உ.குணசீலபாண்டியன், ராஜபாளையம்.

‘‘இந்த தீபாவளிக்கு கபாலி அசத்திட்டானாமே...’’
‘‘என்ன செய்தான் ஏட்டய்யா..?’’
‘‘யார் யாருக்கு எந்த ரகப் பட்டாசு வேணும்னு எல்லா போலீஸ்கிட்டயும் ‘விருப்ப மனு’ வாங்கி... அதன்படி கொடுத்தானே!’’
- உ.குணசீலபாண்டியன், ராஜபாளையம்.

‘‘தீபாவளிக்கு நான் என்னோட அம்மா வீட்டுக்குப் போகணுமா... எதுக்குங்க?’’
‘‘ஆபத்தில்லாத, பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுங்க’ன்னு எல்லோரும் சொல்றாங்களே விமலா!’’
- கே.ஆனந்தன், பி.பள்ளிப்பட்டி.